’விபத்திலும் ஒரு அதிர்ஷ்டம்’ ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த ஊழியர்கள்

கட்டட வேலைகள் நடைபெறும்போது திடீரென விபத்து ஏற்பட்டபோதும், ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பித்த வீடியோ வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 2, 2023, 08:55 PM IST
’விபத்திலும் ஒரு அதிர்ஷ்டம்’ ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த ஊழியர்கள் title=

வேலை நடைபெறும் இடங்களில் விபத்துகள் எதிர்பாராமல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதுவும் கட்டட வேலைகள் நடைபெற்றால் விபத்துக்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஏனென்றால் கவனக்குறைவாக யார் எந்த விஷயத்தை செய்தாலும், மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுவிடும். அப்படி ஓர் இடத்தில் ஊழியர்கள் வேலை விறுவிறுப்பாக செய்து கொண்டிருக்க, திடீரென ஒரு குழப்பம் உண்டாகிறது. ஊழியர்கள் இருவர் மேல் இருந்து கீழே இறங்குகின்றனர். அப்போது கிரேனில் சிறிய வண்டி கட்டி கீழே இறக்கப்படுகின்றன. அப்போது எதிர்பாராத விதமாக கிரேனால் அந்த வண்டியின் பழுவை தாங்க முடியவில்லை.

உடனே கிரேனில் கட்டப்பட்டிருந்த வண்டி எடை தாங்க முடியாமல் அறுந்து கீழே விழுகிறது. அப்போது இறங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் மிகப்பெரிய ஆபத்தில் இருந்தனர். இருந்தபோதும் அந்த வண்டியானது அவர்கள் மீது விழாமல் சற்று தள்ளி கீழே விழுந்து விடுகிறது. மேலே வண்டியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த கிரேன் வண்டி பழுவின் இழுவையால் அதுவும் தலைக்குப்புற கவிழ்ந்து விடுகிறது. இந்த சம்பவங்கள் எல்லாம் நொடிப் பொழுதில் நடந்து முடிந்துவிடுகின்றன. 

மேலும் படிக்க | ’தலைக்கு தில்ல பார்த்தியா..’ முதலையிடம் வம்பு இழுக்கும் வாத்து: வைரல் வீடியோ

பார்ப்பவர்களை நெஞ்சை கனக்க வைக்கிறது. யாருக்கும் எந்த விபத்தும் ஏற்படவில்லை என்ற வகையில் சற்று நிம்மதி அடையலாம். இந்த வீடியோ தான் இப்போது வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோவில், மிகப்பெரிய சைட் ஒன்றில் வேலை நடக்கிறது என்பது தெரிகிறது. ஊழியர்கள் ஏதோ ஒரு வேலைக்காக வண்டியை கிரேனில் கட்டி கீழே இறக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் வண்டியின் பழுவையும், எடையையும் தவறாக கணித்துவிட்டார்கள் போலத் தெரிகிறது. இந்த தவறுதான் மிகப்பெரிய விபத்து ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு அப்போது தெரியவில்லை. எல்லா வேலையை முடித்துவிட்டதுபோல் எண்ணி மற்ற வேலைகளில் கவனம் செலுத்துகின்றனர். 

கடைசியில் விபத்து ஏற்பட்ட பிறகே விபத்துக்கான காரணத்தை ஆராய தொடங்கினர். டிவிட்டரில் பதிவிட்டப்பட்டிருக்கும் இந்த வீடியோ ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றிருக்கிறது. உடனடியாக வேலைகளை முடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவசர கதியில் செய்யப்பட்ட வேலைகளால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: இது தான் ஃபுல் டாஸா... காட்டு பன்றியை தூக்கி எறிந்த காண்டாமிருகம்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News