பாம்பும் பசுவும் ஒன்றாக விளையாடும் வீடியோ: இந்த செய்தி வைரலான வீடியோ, அதில் ஒரு வித்தியாசமான காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. உண்மையில் வீடியோவில் ஒரு பாம்பு பசுவுடன் விளையாடுவதைக் காணலாம். இப்போது இந்த விசித்திரமான ஆனால் மிகவும் வியக்கவைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவிற்கு பயனர்கள் பல்வேறு கமெண்ட்களை அளித்து வருகின்றனர். இந்த காணொளி எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று இதுவரை தெரியவில்லை என்றாலும், இந்த தனித்துவமான வீடியோவை பயங்கரமாக வைரலாகி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகத்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.


மேலும் படிக்க | கியூட்டா ஒரு கேட்வாக்: அசத்தும் நாய் மாடல்கள்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!! வைரல் வீடியோ


பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், மக்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இதனாலே பாம்புகள் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக காட்டுகிறோம். இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெகுவாக வைரலாகி வருகின்றது.


இந்த முழு சம்பவத்தின் வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுஷாந்த் நந்தா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். வெறும் 17 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ பாம்பு மற்றும் பசுவின் நட்பை காட்டுகிறது. வீடியோவில் பசுவும் பாம்பும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு விளையாடுகின்றன. 


வீடியோவை இங்கே காணுங்கள்:



இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கடந்த 15 மணி நேரத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோ பார்த்துள்ளனர். அதே சமயம் இது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  


மேலும் படிக்க | Viral Video: முதல் முத்தம் கொடுத்த போதை... தலைகால் புரியாமல் சுற்றும் நாய்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ