கியூட்டா ஒரு கேட்வாக்: அசத்தும் நாய் மாடல்கள்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!! வைரல் வீடியோ

Funny Dog Video: நாய்களின் ஃபேஷன் உலகத்தை நீங்கள் பார்த்ததுண்டா? பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 3, 2023, 11:43 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் natureferver என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
கியூட்டா ஒரு கேட்வாக்: அசத்தும் நாய் மாடல்கள்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!! வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களின் உலகம் மிகப்பெரியது. பல வீடியோக்கள் இங்கே வைரலாகின்றன. அவற்றில் சில நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. பல வீடியோக்களை பார்த்தால் இப்படி கூட நடக்குமா என நமக்கு தோன்றும். 

நாய்கள் மிகவும் விரும்பப்படும் செல்லப்பிராணிகள். நாய்கள் மனிதனின் சிறந்த நண்பர்களாக பார்க்கப்படுகின்றன. வீட்டில் நாய் உள்ளவர்கள் அவற்றையும் வீட்டின் உறுப்பினர்களாகவே பார்க்கிறார்கள். நாய்களும் வீட்டில் உள்ள நபர்களுடன் அளவு கடந்த பாசத்துடன் நடந்துகொள்கின்றன. சமூக ஊடகங்களில் நாய்களின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவற்றுக்கு இணையவாசிகளிடம் அதிக வரவேற்பும் கிடைக்கின்றன. 

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவும் அப்படித்தான் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் அதிகமாக இதை பகிர்ந்து வருகின்றனர். நீங்கள் விலங்குகளை விரும்புபவராக இருந்தால், இந்த வீடியோவை நீங்கள் நிச்சயமாக மிகவும் விரும்பி பார்ப்பீர்கள் என்பது உறுதி. 

வீடியோக்களை பார்த்தால் மனநிலை பிரகாசமாகும்
 
வீடியோவில், நாம் பல நாய்களை பார்க்கிறோம். நாய்களின் இப்படிப்பட்ட தோற்றத்தை கண்டிப்பாக நீங்கள் இதற்கு முன்னால் பார்த்திருக்க முடியாது. நாய்களைப் பார்க்கும்போது, ​​அவை விதம் விதமாக அழகு படுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. நாய்கள் எங்கேயோ ஒரு நிகழ்ச்சிக்கு போவது போல தெரிகிறது. நாய்கள் சங்கிலிகள், வண்ண மயமான ஆடைகள், இலை தழைகள், கண் மை, பிளாஸ்டிக் கொம்பு இன்னும் பல வித அலங்கார பொருட்கள் கொண்டு அமர்க்களமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. நாய்களை பார்த்தால் இவை ஒரு ஃபேஷன் ஷோவில் கலந்துகொள்ள தயாராய் இருப்பது போல தோன்றுகிறது.

மேலும் படிக்க | அடேயப்பா... மயில் இப்படியும் பறக்குமா... ஆச்சரியம் அளிக்கும் வைரல் வீடியோ!

எதிர் எதிரே இரு அறைகள் இருக்க, இரு அறைகளில் இருந்தும் நாய்கள் ஒவ்வொன்றாக கேட்வாக் செய்துகொண்டு வருகின்றன. அவை கேமராவுக்கு மிக அருகில் வந்து க்ளோஸ் அப்பில் தங்கள் முகத்தை காட்டுகின்றன. இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது.

நாய்களின் ஃபேஷன் ஷோவை இந்த வீடியோவில் காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Śh Iv à (@natureferver)

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் natureferver என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பக்காவான உடை அணிந்து படு ஸ்டைலாக ஃபேஷன் ஷோ நடத்தும் நாய்களை அனைவரும் வியந்து பாராட்டி வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நீ பாதி நான் பாதி: குரங்குடன் நபர் அடிக்கும் கும்மாளம்.. செம கியூட் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News