வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில், நாய் எப்போதும் மனிதர்களுக்கு நெருக்கமான மற்றும் மிகவும் விசுவாசமான விலங்காக கருதப்படுகிறது. உரிமையாளரின் பாதுகாப்பிற்காக தன் உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாத விலங்கு இது. தற்போது அப்படியொரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது, அதில் மனிதர்களுக்கு தன்னை விட யாரும் விசுவாசமாக இருக்க முடியாது என்பதை நாய் மீண்டும் நிரூபித்துள்ளார். உண்மையில், முதலை ஒன்று திடீரென தண்ணீரிலிருந்து வெளியேறி, வீட்டிற்கு ரகசியமாக நுழைந்தது. அந்த முதலை அங்கிருப்பவரை காயப்படுத்துவதற்கு முன், நாய் தனது விசுவாசமுள்ள குணத்தை வெளிபடுத்தியுள்ளது.


 மேலும் படிக்க | ‘ஆள விடுடா சாமி’: விட்டால் போதும் என ஓடியே போன பாம்பு, வியக்க வைக்கும் வைரல் வீடியோ


வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்த முதலை
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ஆபத்தான முதலை திடீரென தண்ணீரில் இருந்து வெளியேறி வீட்டிற்குள் நுழைய முயல்வதை நாம் காணலாம். ஆனால் அதற்கு முன், அங்கிருந்த நாய் உடனடியாக முதலையை தாக்கத் தொடங்குகிறது. முதலை பதிலடி கொடுத்தாலும் நாயின் வேகத்திற்கு முன் நிற்க முடியவில்லை.


சண்டையின் வீடியோவை இங்கே பாருங்கள்:



முதலைக்கும் நாய்க்கும் இடையே நடக்கும் சண்டையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நெட்டிசன்களும் கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோ beautiful_new_pixandwild_animal_pix என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | சோனமுத்தா போச்சா..சிங்கத்திடம் சின்னாபின்னமான நபர்: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ