‘ஆள விடுடா சாமி’: விட்டால் போதும் என ஓடியே போன பாம்பு, வியக்க வைக்கும் வைரல் வீடியோ

Rare Snake Video: மனிதனை பார்த்து பாம்புக்கு பயமா? அல்லது, பாம்பை பார்த்து மனிதனுக்கு பயமா என நம்மை குழம்ப வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 29, 2022, 11:39 AM IST
  • தற்போது, பாம்பின் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
  • இது மிகவும் வித்தியாசாமான ஒரு வீடியோவாக உள்ளது.
  • இதில் அச்சரியமான விஷயம் அந்த பாம்பின் வேகம்தான்.
‘ஆள விடுடா சாமி’: விட்டால் போதும் என ஓடியே போன பாம்பு, வியக்க வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

விலங்குகளில் பாம்பு, சிங்கம், புலி, குரங்கு, நாய், பூனை ஆகிய விலங்குகளின் வீடியோக்களுக்கு இணையத்தில் மவுசு அதிகம். அதுவும் பாம்பின் வீடியோக்களுக்கு என்றுமே இணையவாசிகளிடம் தனி கிரேஸ் உள்ளது. தினமும் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

பாம்பு என்றாலே அனைவரும் அச்சப்படுவது வழக்கம். அதன் அருகில் நின்று அது செய்வதை பார்க்கும் துணிவு யாருக்கும் கிடையாது. இப்படி இருக்க, பாம்பின் பல வித செயல்களையும், அது பிற மிருகங்களை வேட்டையாடுவதையும், சில நேரங்களில் பிற மிருகங்கள் அதை படுத்துவதையும் வீடியோவில் பார்ப்பது மக்களுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

மேலும் படிக்க | சோனமுத்தா போச்சா..சிங்கத்திடம் சின்னாபின்னமான நபர்: வீடியோ வைரல்

தற்போதும், பாம்பின் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இது மிகவும் வித்தியாசாமான ஒரு வீடியோவாக உள்ளது. இதில், ஒரு பெரிய பாம்பை ஒரு நபர் ஒரு டிரம்மில் அடைத்து அதை ஒரு நீர்நிலையில் விடுவிக்க கொண்டு வருகிறார். டிரம்மின் மூடியைத் திறந்து அந்த நபர் பாம்பை வெளியே விடுகிறார். மூடியை திறந்து அதை கவிழ்த்து விட்டு, அவர் அங்கிருந்து வேகமாக சென்று விடுகிறார். பாம்பு தன்னை தாக்கி விடுமோ என்ற பயம் அவருக்கு இருப்பது தெரிகிறது. ஆனால், அங்குதான் ட்விஸ்ட் காத்திருக்கிறது. டிரம்மை சாய்த்து அந்த நபர் பாம்பை வெளியே தள்ளியவுடன், பாம்பு சில நொடிகளுக்கு அப்படியே இருக்கிறது. பிறகு திடீரென கிடுகிடுவென விட்டால் போதும் என வேகமாக ஓடி விடுகிறது.

இதில் அச்சரியமான விஷயம் அந்த பாம்பின் வேகம்தான். சிறிய, மெல்லிய பாம்புகள் வேகமாக ஊர்ந்துசெல்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், பெரிய பாம்புகள் பொதுவாக மிக மெதுவாகவே ஊர்ந்து செல்லும். அப்படி இருக்க, அளவில் பெரியதாக இருக்கும் இந்த பாம்பு இவ்வளவு வேகமாக செல்வது பார்ப்பதற்கு மிக ஆச்சரியமாக உள்ளது. சிறிது தாமதித்தாலும், நாம் மீண்டும் டிரம்முக்குள் அடைபட்டு விடுவோம் என அந்த பாம்பு நினைத்திருக்கலாம்.

ஓட்டம் எடுத்த பாம்பின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ @ViciousVideos என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | மண்புழு போல் ஊர்ந்த 16 அடி நீள பாம்பு..பயங்கரமா இருக்கே: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News