சோனமுத்தா போச்சா..சிங்கத்திடம் சின்னாபின்னமான நபர்: வீடியோ வைரல்

Lion Attack Video: சிங்கத்தின் கூண்டில் கையை வைத்த நபர் எப்படி மாட்டிக்கொள்கிறார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம் ஆனால் அதன் பின் நடந்ததை பார்த்தால் உங்களால் நம்பவே முடியாது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 29, 2022, 10:45 AM IST
  • சிங்கத்தை சீண்டிய நபர்.
  • சிங்கம் சக்திவாய்ந்த விலங்குகளாக கருதப்படுகின்றன.
  • இன்றைய வைரல் வீடியோ கிடுகிடுக்க வைக்கும்.
சோனமுத்தா போச்சா..சிங்கத்திடம் சின்னாபின்னமான நபர்: வீடியோ வைரல் title=

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

அந்தவகையில் இங்கு மிருகக்காட்சிசாலை நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் அதிகம் வைரலாகி வருகின்றது.இங்கு ஒரு சில நபர்கள் கூண்டில் இருக்கும் சிங்கத்தை தொட முயற்சிப்பதை வீடியோவில் நாம் காணலாம். அதன்பின் நடந்தது என்ன? வாருங்கள் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | மண்புழு போல் ஊர்ந்த 16 அடி நீள பாம்பு..பயங்கரமா இருக்கே: வீடியோ வைரல்

சீறி பாய்த்த சிங்கம்
வைரலாகி வரும் இந்த வீடியோவில், நபர் ஒருவர் தனது நண்பர்களுடன் மிருகக்காட்சிசாலைக்கு சுற்றுலா சென்றிருப்பதை நீங்கள் காண்லாம். இங்கே ஒரு கூண்டில் சிங்கம் பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட அவர்கள்  அங்கு செல்கின்றனர். பிறகு அந்த நபர் சற்றும் யோசிக்காமல் கூண்டிற்குள் கையை வைத்து சிங்கத்தை தொட ஆரம்பித்தார். ஆனால் சில நொடியில் அந்த சிங்கம் நபரின் கையை கவ்விக் கொள்கிறது. உடனே அங்கிருந்த மற்றொரு நபர் அவரது கையை இழுத்து காப்பாற்றினர்.

வீடியோவை இங்கே காணுங்கள்: 

சிங்கத்தின் இந்த வீடியோ @ViciousVideos என்கிற டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுலளது. அத்துடன் இணையவாசிகள் இதற்கு பல்வேறு கமெண்டுகளை அளித்து வருகிறார்கள், மேலும் இதுவரை இந்த வீடியோ 8 லட்சம் பார்வையாளர்களையும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: துப்பாக்கியினால் சுட்டவரை பதம் பார்த்த பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News