கோடைக்காலத்தில் ஓய்வெடுக்க மலைப்பிரதேசங்களுக்கு போகலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள், இந்த வீடியோவைப் பார்த்தால் பரவசமாகி உடனே கிளம்பிவிடுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆபத்தான விலங்குகள் மற்றும் பறவைகளின் செய்திகளும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பிரபலமாகின்றன. அதுமட்டுமல்ல, அழகான அபூர்வமான விலங்குகளின் செயல்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி, பட்டையைக் கிளப்புகின்றன.


பென்குயின்கள் நீரில் இருந்தாலும் அழகுதான், நிலத்தில் நடந்து சென்றாலும் அழகு தான், பனிப்பாறையில் வாக்கிங் சென்றாலும் அழகுதான். அழகுக்கு இலக்கணம் வகுக்கும் பென்குயின்களின் அழகு நடை அனைவரையும் கவர்கிறது.


மேலும் படிக்க | காத்து வாங்க கடற்கரைக்கு படையெடுக்கும் பென்குயின் கூட்டம்


விரைவாக நீரில் நீந்தும் பென்குயின்களால், நிலத்தில் நடப்பது கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கிறது. அது விந்தையாகவும் இருக்கும். அதிலும் அவை குதித்து குதித்து நடப்பது சுவராசியமாக இருக்கிறது.


வெண்மையும் கருமையும் கொண்ட பென்குயின்கள், பனி சூழ்ந்த மலைப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொன்றாய் நடந்து போவது பார்க்கப் பார்க்க பரவசமூட்டுகிறது. அது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறதா? நீங்களே இந்த வீடியோவைப் பார்த்தால் புரிந்துக் கொள்வீர்கள்.


மேலும் படிக்க | மலைப்பாம்பா இருந்தா மலைச்சு போயிடுவேனா: கடித்துக் குதறும் முதலை


அழகான வாக்கிங் வீடியோ இதோ உங்களுக்காக...



இவற்றின் அழகு, அந்தப் பகுதி முழுவதையும் அழகாக மாற்றிவிட்டது. ஆனால், என்ன அவை தத்தி தத்தி நடைபயில்வதும் ஒரு வித்தியாசமான அழகாகவே இருக்கிறது. 


மேலும் படிக்க | போரை நிறுத்துங்கள் மழலையின் கெஞ்சல்! 


இருபுறமும் அசைந்து அசைந்து நடக்கின்றன. பனிக்கட்டியின் மீது வழுக்கிச் செல்லும் பென்குயினின் அழகுக்கு ஈடாக வேறு எதையும் சொல்ல முடியுமா. மனிதர்களுக்கு ஈடாக பென்குயின்கள் வேகமாக ஓடவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.  


வாக்கிங் செல்லும் பென்குயின்களை பார்க்கவே பரவசமாக இருக்கிறது. அதிலும் மேட்டில் இருந்து கீழே இறங்குவதற்காக அழகாக குதித்து நடப்பதை பார்க்க பரவசமாக இருக்கிறது.


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. பலரும் பகிர்ந்து இந்த வீடியோவை வைரலாக்கியுள்ளனர்.


மேலும் படிக்க | ஆட்டுக்கும் மயிலுக்கும் ‘சில்லுனு ஒரு சண்டை’, சிரிக்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe