காத்து வாங்க கடற்கரைக்கு படையெடுக்கும் பென்குயின் கூட்டம்

சூடான இந்த கோடைக்காலத்தில் கடல் நீருக்குள் நிம்மதியாக ஓய்வெடுக்காமல், வெயில் கொளுத்தும் கரையில் பென்குயின்களுக்கு என்ன வேலை? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 7, 2022, 09:15 PM IST
காத்து வாங்க கடற்கரைக்கு படையெடுக்கும் பென்குயின் கூட்டம் title=

சூடான இந்த கோடைக்காலத்தில் கடல் நீருக்குள் நிம்மதியாக ஓய்வெடுக்காமல், வெயில் கொளுத்தும் கரையில் பென்குயின்களுக்கு என்ன வேலை? 

ஆபத்தான விலங்குகள் மற்றும் பறவைகளின் செய்திகளும் வீடியோக்களும் மட்டுமா பிரபலமாகின்றன? அழகான அபூர்வமான விலங்குகளின் செயல்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி, சக்கைப்போடு போடுகின்றன.

பென்குயின்கள் நீரில் இருந்தாலும் அழகுதான், நிலத்தில் நடந்து சென்றாலும் அழகு தான்.இறகுகள் இருந்தாலும் அவற்றால் பறக்க முடியாது. அதை துடுப்புகள் என்றே சொல்லலாம். 

விரைவாக நீரில் நீந்தும் பென்குயின்களால், நிலத்தில் நடப்பது கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கிறது. அது விந்தையாகவும் இருக்கும். 

மேலும் படிக்க | மலைப்பாம்பா இருந்தா மலைச்சு போயிடுவேனா: கடித்துக் குதறும் முதலை

நாட்டில் இருப்பவர்கள் காற்று வாங்க கடற்கரைக்குப் போகலாம். ஆனால் கடலையே வீடாக கொண்டுள்ள பென்குயின்களின் இந்த கடற்கரைப் பயணம் காத்து வாங்கவா?

காத்து வாங்க கூட்டம் கூட்டமாய் கடற்கரைக்கு வந்து உல்லாசமாக இருக்கும் பென்குயின்களின் வீடியோ வைரலாகிறது என்றாலும், இதை பார்த்து ரசிப்பவர்களால், ஒரு முறையுடன் பார்ப்பதை நிறுத்த முடியவில்லையாம்.

 

காற்று வாங்க கடற்கரைக்கு வந்திருந்தாலும் சரி, இல்லை ஜாலியாக அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஊர்வலமாக கடற்கரைக்கு வந்திருந்தாலும் சரி, வெண்மையும் கருமையும் கொண்ட பென்குயின்களின் கூட்டம் அழகாக இருக்கிறது.

மேலும் படிக்க | ஆட்டுக்கும் மயிலுக்கும் ‘சில்லுனு ஒரு சண்டை’, சிரிக்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ 

இவற்றின் அழகு, அந்தப் பகுதி முழுவதையும் அழகாக மாற்றிவிட்டது. ஆனால், என்ன அவை தத்தி தத்தி நடைபயில்வதும் ஒரு வித்தியாசமான அழகாகவே இருக்கிறது. 

இருபுறமும் அசைந்து அசைந்து நடக்கின்றன. பனிக்கட்டியின் மீது வழுக்கிச் செல்லும் பென்குயினும் அழகு என்றாலும், இவை மனிதர்களுக்கு ஈடாக வேகமாக ஓடவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.  

கூட்டம் கூட்டமாக கடற்கரையில் ஓய்வெடுக்கும் பென்குயின்களை பார்க்கவே பரவசமாக இருக்கிறது.

earthpix என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. பலரும் பகிர்ந்து இந்த வீடியோவை வைரலாக்கியுள்ளனர்.

மேலும் படிக்க | போரை நிறுத்துங்கள் மழலையின் கெஞ்சல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News