வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக, விலங்குகள், குறிப்பாக நாய்கள், அடிக்கடி குளிப்பதை தவிர்க்க விரும்புகின்றன. நாய்களை வளர்ப்பவர்கள் தங்கள் செல்ல பிராணிகளுக்கு குளிப்பாட்ட முயற்சித்தாலும், செல்லமாக மறுத்து அதிலிருந்து தப்பிக்கவே நாய்கள் விரும்புகின்றன. நாய்களின் பல கியூட் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்படுகின்றன. நம்மில் பலர் ஆசையாக நாய்களை வளர்க்கிறோம். அவற்றை குழந்தைகளை போல பார்த்துக்கொள்கிறோம். 


தற்போது ஒரு நாயின் கியூட்டான செயல் ஒன்றின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ள நாய் நாம்  யோசிக்க முடியாத ஒன்றை செய்கிறது, அதுவும் மிக ஆசையாக செய்கிறது. ஆம், இந்த நாய் மிக ஆசையாக நீரில் விளையாடியபடியே குளிக்கின்றது. இது பார்ப்பதற்கு மிக கியூட்டாக உள்ளது. 


மேலும் படிக்க | மனிதரை சுற்றும் மெகா மலைப்பாம்பு! காலைச் சுற்றிய பாம்பை கையால் அடக்கும் வீரர்! வைரல் வீடியோ


சூப்பரான வாழ்க்கையை அனுபவிக்கும் நாய்


சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் ‘நல்ல வாழ்க்கை...’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ட்விட்டரில் @buitengebieden என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் அவ்வப்போது இதயத்தைத் தொடும் பல விலங்கு சீடியோக்கள் பகிரப்படுகின்றன. இந்த குறிப்பிட்ட வீடியோவில், ஒரு நாய் ஒரு வாளியில் அமர்ந்து குழாயிலிருந்து வரும் தண்ணீரில் விளையாடியபடி குளிப்பதை காண முடிகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. 


குளித்து கும்மாளம் போடும் நாயின் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ ஜனவரி 30 அன்று பகிரப்பட்டதிலிருந்து ஏற்கனவே 478.6K வியூஸ்களைப் பெற்றுள்ளது. கூடுதலாக, இதற்கு பல லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்த வண்ணம் உள்ளனர். 


மேலும் படிக்க | Viral Video: இணையவாசிகளை அசர வைத்த பாம்பின் ‘ஹை ஜம்ப்’!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ