Viral Video: இணையவாசிகளை அசர வைத்த பாம்பின் ‘ஹை ஜம்ப்’!

Snake Viral Video: தகவல்களின் களஞ்சியமாக விளங்கும் இணையதளத்தில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை அள்ளி வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன், நமது மனதை லேசாக்கும் கேளிக்கை அம்சங்களுக்கும் குறைவிருக்காது. 

Last Updated : Feb 1, 2023, 12:13 AM IST
  • சாதாரண பாம்புகள் இப்படி குதிப்பது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
  • பாம்பு வீடியோ வைரலாகி வருகிறது.
  • இந்த வீடியோவை IAS அதிகாரி சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Viral Video: இணையவாசிகளை அசர வைத்த பாம்பின் ‘ஹை ஜம்ப்’! title=

இணைய உலகம் எண்ணிலடங்கா அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகம். தகவல்களின் களஞ்சியமாக விளங்கும் இணையதளத்தில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை அள்ளி வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன், நமது மனதை லேசாக்கும் கேளிக்கை அம்சங்களுக்கும் குறைவிருக்காது. நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து தப்பிக்க இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு பெரிதும் உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். 

அந்த வகையில் கூரையிலிருந்து சாலையில் குதிக்கும் பாம்பு ஒன்றின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் பாம்பு ஒரு தேர்ந்த விளையாட்டு வீரனைப் போல ஹை ஜம்ப் செய்வது இணையவாசிகளை அசர வைத்துள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: கில்லாடி பூனைக் குட்டி காயினை வைத்து செய்யும் அசத்தல் மேஜிக்!

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்: 

உண்மையில், இந்த வீடியோவை இந்திய நிர்வாக சேவை அதிகாரி சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் இது  நம்பமுடியாத சம்பவம் என்று விவரிக்கும் ஒரு எமோஜியையும் அதில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு வீட்டின் கூரையின் ஓரத்தில் பாம்பு அமர்ந்திருப்பது வீடியோவில் தெரிகிறது. கூரையில் மேலிருந்து பாம்பு மிக லாவகமாக குதித்து சாலையில் லேண்ட் செய்து ஓடுகிறது. குதிப்பதற்கு முன் ஒரு தேர்ந்த விளையாட்டு வீரன் போல, சிறிது பின்வாங்கி அங்கிருந்து குதித்தது. எதிரே உள்ள சாலையில் பாம்பு குதித்து விழுகிறது.  அதன் வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டவுடன், அது படுவேகமாக வைரலானது. பாம்பு கூட இப்படி குதிக்குமா என்று மக்கள் ஆச்சரியப்பட்டனர். பறக்கும் பாம்புகள் பற்றி பல குறிப்புகள் முன்வைக்கப்பட்டாலும், சாதாரண பாம்புகள் இப்படி குதிப்பது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: சாப்பிடு செல்லம்! ஆமை நண்பனைக் கொஞ்சும் சிம்பன்சி வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News