Viral Video: கில்லாடி பூனைக் குட்டி காயினை வைத்து செய்யும் அசத்தல் மேஜிக்!

விலங்குகள் எப்போதும் ஆச்சரியத்துக்குட்பட்டவை. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 31, 2023, 08:44 PM IST
  • ஒரு மனிதன் பூனைக்குட்டியுடன் விளையாடுவதைக் காணலாம்.
  • விலங்குகள் எப்போதும் ஆச்சரியத்துக்குட்பட்டவை.
  • பூனைகள் உண்மையில் மனிதர்களுடன் பேசுகின்றன.
Viral Video: கில்லாடி பூனைக் குட்டி காயினை வைத்து செய்யும் அசத்தல் மேஜிக்! title=

விலங்குகள் எப்போதும் ஆச்சரியத்துக்குட்பட்டவை. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன. வீட்டில் வளர்க்கும்போது அவை வீட்டில் ஒருவராகவே வளரும். செல்ல பிராணிகள் செய்யும் குறும்புகள், செயல்கள் எல்லாமே ரசிக்கும்படி இருப்பவை. விலங்குகளின் நடத்தை குறித்த நிபுணர்கள், பூனைகள் உண்மையில் மனிதர்களுடன் பேசுகின்றன என்கின்றனர். அவை தனக்கு தெரிந்த வழியில் பேசுகின்றன, உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கின்றன.  மேலும், நாம் செல்லப்பிராணிகளாக வைத்திருக்கும் பெரும்பாலான நாய் இனங்களுடன் ஒப்பிடும்போது அவை அளவு சிறியவை, எனவே அவை மிகவும்  தனது உரிமையளருடன் நன்றாக விளையாடுகின்றன.

இந்த வைரலான வீடியோ, ஒரு மனிதன் பூனைக்குட்டியுடன் விளையாடுவதைக் காணலாம். அவர் தனது கையை திருப்பி வைத்துக் கொண்டு ஒரு நாணயத்தை வைக்கிறார், அதாவது உள்ளங்கையின் பின்புறம். காசைப் புரட்டி மூடி, காசைக் காட்ட உள்ளங்கையைத் தூக்குகிறார். பின்னர் அவர் நாணயத்தை பூனைக்குட்டியின் பாதத்தின் மேல் வைக்கிறார், அது மனிதனைப் போலவே காயினை டாஸ் செய்து, அதன் சிறிய பாதத்தால் அதை மூடுகிறது. பின்னர் அது நாணயத்தை காட்ட காலைத்  தூக்குகிறது.

மேலும் படிக்க | Viral Video: தோகை விரித்து ஆடும் மயிலை பார்த்திருப்பீங்க; பறந்து பார்த்திருக்கீங்களா!

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

 

 

இது ஒரு வழக்கமான செயலாகத் தோன்றலாம், ஆனால் விலங்குகளின் நடத்தை மற்றும் செல்லப்பிராணி வளர்ப்பில் உள்ளவர்கள் நிச்சயமாக இங்கே, வெளிப்படும் பெற்றோர்-குழந்தை பிணைப்பை அனுபவித்து ரசிப்பார்கள், மேலும் இது செல்லப்பிராணிகளுக்கும்  அதன் உரிமையாளருக்கும் இடையே ஆன நெருக்கத்தையும் பாசத்தையும் எடுத்துக் காட்டுகிறது என்றால் மிகையில்லை. மேலும் இந்த வீடியோ அனைவரின் அன்றாட டென்ஷனை குறைத்து மனதிற்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் என்பதிலும் சந்தேகம் ஏதும் இல்லை. 

மேலும் படிக்க | Viral Video: புலியா இல்லை பூனையா... கரடியை பார்த்து அஞ்சி ஓடிய புலி!

மேலும் படிக்க | Viral Video: பாம்பிடம் சிக்கிய தவளை; மனதை பதறச் செய்யும் கொடூர வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News