Viral Video: புலியா இல்லை பூனையா... கரடியை பார்த்து அஞ்சி ஓடிய புலி!

Viral Video of Tiger Vs Bear: வன வாழ்க்கை சுவாரஸ்யங்களும் அதிர்ச்சிகளும் நிறைந்தது. காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிரப்படுகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 30, 2023, 07:54 PM IST
  • புலி மற்றும் கரடி இரண்டுமே ஆபத்தான விலங்குகள் தான்.
  • புலி - கரடி வேட்டை வீடியோ.
  • வீடியோவில் கரடி ஒன்றை குறி வைத்து புலி மெல்ல மெல்ல நெருங்கி வருவதைக் காணலாம்.
Viral Video: புலியா இல்லை பூனையா... கரடியை பார்த்து அஞ்சி ஓடிய புலி! title=

வன வாழ்க்கை சுவாரஸ்யங்களும் அதிர்ச்சிகளும் நிறைந்தது. காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிரப்படுகின்றன. இந்த வீடியோக்களில், சில வீடியோக்கள், சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன,  சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. 

தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகி வரும்m வீடியோவில் கரடி ஒன்றை குறி வைத்து புலி மெல்ல மெல்ல நெருங்கி வருவதைக் காணலாம். அதனை இலகுவான இரையாக கருதி புலி கரடியை நெருங்குவதை காணலாம். ஆனால், அப்புறம் நடந்ததை பார்த்தால், உங்களுக்கு ஆச்சர்யம் மேலிடும்.

புலி மற்றும் கரடி இரண்டுமே ஆபத்தான விலங்குகள் தான்.  இவை எதையாவது இரையாக்க நினைத்தால், அதனை கொன்ற பிறகு தான் அமைதி அடையும். இந்த வீடியோவிலும் ( Viral Video) கரடியைப் பார்த்ததும், புலி தனது கால்களை மிக மென்மையாக பதித்தும் கரடியை நோக்கி வருவதை நீங்கள் காணலாம். பிறகு வாய்ப்பு கிடைத்தவுடன் அதன் மீது பாயத் தயாரகிறது. 

மேலும் படிக்க | பாம்பெல்லாம் எனக்கு பஞ்சுமிட்டாய் மாதிரி: மாஸ் கட்டும் வாத்து, அதிர்ந்துபோன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

புலி - கரடி வேட்டையை இங்கே கணலாம்: 

வீடியோவின் முடிவில், நிலைமை தலைகீழானது. ஆம், நாம் கரடி புலிக்கு இரையாகி விடும் என எண்ணிய நிலையில்,  கரடி திரும்பி புலியை தாக்க முயல்வதையும், கரடிக்கு அஞ்சி புலி  ஓடுவதையும் நீங்கள் காண்பீர்கள். எப்படியோ, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ​​புலி அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்கிறது. இந்த  வீடியோ  animals_powers என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த காட்சியை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: பாம்பிடம் சிக்கிய தவளை; மனதை பதறச் செய்யும் கொடூர வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News