Viral Video: பியானோ இசையை தாயுடன் ரசிக்கும் குட்டி யானையின் க்யூட் வீடியோ!
இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அதிலும், குட்டி யானைகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அதிலும், குட்டி யானைகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். யானைகள் மற்ற விலங்குகளை போல அன்றி, விதிவிலக்காக புத்திசாலித்தனமான உயிரினங்கள் எனலாம்.
யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை கொண்டவை. அதிலும், குட்டி யானைகள் செய்யும் குறும்புளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். மனதை லேசாக்கி மனதில் உள்ள கவலைகளையும் டென்ஷனையும் ஓட விரட்டு திறன் பெற்றவை. ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் குளித்தாலும், சாப்பிட்டாலும்,தூங்கினாலும் அல்லது விளையாடினாலும் என அவை என்ன செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். அந்த வகையில் குட்டி யானை ஒன்று தனது தாயுடம் இசையை ரசிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | Viral Video: ஸ்ப்ப்பா முடியலை... என்ன விடுடா... குட்டி யானையுடன் போராடும் இளைஞர்!
வைரலாகும் வீடியோவைக் கீழே காணலாம்:
தாய் யானையும் அதன் குட்டியும், ஒரு நபர் பியானோ வாசிப்பதைக் கேட்டு ரசிப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை முதலில் தாய்லாந்தைச் சேர்ந்த பியானோ கலைஞர் பால் பார்டன் வெளியிட்டார். நார்போல் என்ற தாய் யானையும், நார்கெல் என்ற அழகான குட்டி யானையும் காட்டின் நடுவில் பியானோ வாசிக்கும் மனிதனின் அருகில் நிற்பதை வீடியோவில் காணலாம்.
பியானோ இசைக்கலைஞர் ஒரு கிளாசிக்கல் பாடலின் இனிமையான குறிப்புகளை அழகாக வாசித்தபோது, இரண்டு யானைகளும் மண்ணை வாரி இறைத்து விளையாடிக் கொண்டே இசையைக் கேட்டு மகிழ்ந்தன. இந்த வீடியோவை பீத்தோவன் மிகவும் ரசித்திருப்பார் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ