Viral Video: ஸ்ப்ப்பா முடியலை... என்ன விடுடா... குட்டி யானையுடன் போராடும் இளைஞர்!

குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. குட்டி யானைககள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 15, 2022, 03:38 PM IST
  • யானைககள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன.
  • குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை.
  • யானைகள் மற்ற விலங்குகளை போல அன்றி, விதிவிலக்காக புத்திசாலித்தனமான உயிரினங்கள் எனலாம்.
Viral Video: ஸ்ப்ப்பா முடியலை... என்ன விடுடா... குட்டி யானையுடன் போராடும் இளைஞர்! title=

யானைகள் மற்ற விலங்குகளை போல அன்றி, விதிவிலக்காக புத்திசாலித்தனமான உயிரினங்கள் எனலாம். யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. அதிலும், குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். 

குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. குட்டி யானைகள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன. இதற்கென்று தனியாக ரசிகர் பட்டாளம் உண்டு யானையின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் சில சமயங்களில் விநோதமாகவும் இருப்பதால் அவை நம் மனதை லேசாக்குகின்றன. அந்த வகையில், குட்டி யானை ஒன்று, ஒரு இளைஞனின் மேல் விழுந்து புரண்டு படாய் படுத்தும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

அந்த வீடியோவில், குட்டி யானை ஒன்று, பாசத்துடன் இளைஞன் ஒருவர் மீது  விழுந்து புரளுவதைக் காணலாம். சிறிது நேரத்திற்குள், இளைஞன் மீது விழுந்து புரண்டு, விளையாடத் தொடங்குகிறது பின்னர் எப்படியோ, குட்டி யானையிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவன் அதனை கட்டுப்படுத்துகிறார். naturreandanimals_being_epic என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட வீடியோவை பலர் பார்த்து ரசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | நாட்டு சரக்கை குடித்து விட்டு மட்டையான யானைகள்... படாத பாடுபட்டு எழுப்பிய வனத்துறையினர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News