மற்ற விலங்குகளை காட்டிலும், நாய்கள் நன்றியுள்ள பிராணிகள் என்று சொல்வதுண்டு.  அந்த கருத்து வெறும் பேச்சுக்கு சொல்வதல்ல, அது உண்மையான கருத்து தான் என்பது தற்போது நிரூபணமாகி இருக்கிறது.  ஒரு நாய் அவரது முதலாளியை காப்பாற்ற தனது உயிரை பற்றியும் கவலைப்படாமல் தண்ணீருக்குள் குதிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி, பாராட்டுக்களை பெற்றுள்ளது.  இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இதுவே முதல் தடவையல்ல, தனது உரிமையார்களை கடித்து விடக்கூடாது என்பதற்காக பாம்புடன் சண்டையிட்டு உயிரை மாய்த்துகொண்ட பல நாய்களின் கதைகளை கேள்விப்பட்டிருக்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஊஞ்சலாடப் போய் மல்லாக்கா விழுந்த பெண்கள்: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ 


தற்போது இந்த அரிய நிகழ்வானது ட்விட்டரில் அபிஸ் நேச்சர் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், ஒரு நீர் சூழ்ந்த குளம் ஒன்று உள்ளது, அதனருகில் மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது, அதில் ஒரு மனிதரும், இரண்டு நாய்களும் நின்றுகொண்டு இருக்கின்றன.  அவர் ஒரு கயிறை பிடித்து தொங்கிக்கொண்டே தண்ணீருக்குள் குதிக்கிறார், அதனை கண்ட அந்த நாய் தனது முதலாளி நீருக்குள் தவறி விழுந்துவிட்டார் என எண்ணி பதட்டமாக ஓடுகிறது.  அதனையடுத்து அந்த நாய் செய்வதறியாது பதட்டமாக அங்குமிங்குமாக ஓடிக்கொண்டே இருந்து பின்னர் அதன் முதலாளியை காப்பாற்ற தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது.  


 



பிறகு தண்ணீரில் நீந்திக்கொண்டே அதன் முதலாளியிடம் செல்ல அவர் அதனை அரவணைத்து கொள்வதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.  இந்த வீடியோவானது இணையத்தில் பதிவேற்றப்பட்ட சில மணி துளிகளிலேயே எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.  நாயின் இந்த செயலை இணையத்தில் கண்ட பலரும் அதற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | மணிக்கணக்கில் ஓடிவந்த சிறுத்தைக்கு காத்திருந்து அல்வா கொடுத்த மான் - வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR