நாடு முழுவதும் குடிப்பழக்கமும், போதைப் பழக்கமும் அதிகரித்து வருவது வேதனையான விஷயம். இது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதனை தவிர்த்து யாரையும் துன்புறுத்தாத ஜாலியான அம்சமும் இருக்கிறது. மது உள்ளே சென்றுவிட்டால், நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையெல்லாம் பொதுவாக போதை ஆசாமிகள் மறந்துவிடுவார்கள். அவர்கள் அந்த நேரத்தில் குழந்தையாகவும் மாறுவார்கள், ஆக்ரோஷமான கொடூர ஆசாமிகளாகவும் இருப்பார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆனாலும் இம்புட்டு கோபம் கூடாது...படகை துரத்தும் நீர்யானை: வைரல் வீடியோ


இதில் குழந்தை கேரக்டராக மாறுபவர்கள் செய்யும் சேட்டைகள் அனைவரையும் மிகப்பெரிய மிகப்பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். அப்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. போதை ஆசாமி ஒருவர் தானாக ஆடிக் கொண்டு சாலையில் செல்கிறார். என்ன பாட்டை மனதில் நினைத்து ஆடினாரோ தெரியவில்லை. ஆனால், நாலு ஸ்டெப் என்றாலும் நச்னு போட்டுள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த அங்கிருந்த நெட்டிசன் ஒருவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இப்போது அந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 



போதாக்குறைக்கு ’இந்த இடம் இல்லைனா சாமி மடம் தானே ....’  என்ற பாட்டை அவரின் நடன அசைவுகளுக்கு ஏற்ப எடிட் செய்து போட்டுள்ளார். அந்த பாட்டும், அவர் ஆடும் ஆட்டமும் நன்றாக சின்ங்காகியுள்ளது. இப்போது வரை அந்த வீடியோவை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். இதில் கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன் ஒருவர் வீக்கெண்ட் என்றாலே அவரை போல் தான்பலரும் இருப்பார்கள் என கிண்டலடித்துள்ளார்.


மேலும் படிக்க | பாலைவனத்தின் வெந்நீர் ஊற்று! கிணறு தோண்டினால் கிளம்பியது சொர்க்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ