வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஒரு ஆச்சரியமான உலகமாக இருக்கிறது. இங்கே நாம் காணும் பல விஷயங்களை நம்மால் நம்ம கூட முடியாது. பொதுவாக நாம் இணையத்தில் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கும, சில சமயம் சிந்திக்க வைக்கும், சில சமயம் ஆச்சரியப்பட வைக்கும, அதேபோல் சில சமயங்களில் அதிர்ச்சியை தரும். அதிலும் இந்த இணைய உலகத்தில் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு இருக்கிறது.
அந்த வகையில் சுவாரஸ்யமான இணைய உலகமான சமூக ஊடகங்களில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் சமூக ஊடக உலகில் தினம் தினம் பகிரப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. இந்த வீடியோ ஒரு ஆபத்தான நீர்யானை தொடர்பானது.
மேலும் படிக்க | ரயில் செல்லும்போது தண்டவாளத்தில் சிக்கிய நாய்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பும் வீடியோ
நீர்யானையின் ஆக்ரோஷம்
பொதுவாக நீர்யானை போன்ற பெரிய விலங்குகள் மிகவும் ஆபத்தானவை ஆகும். முதலைகள் கூட இந்த நீர்யானைகள் கூட்டம் இருக்கும் பகுதிக்கு செல்லாது. அந்த அளவிற்கு இவை மிகவும் ஆபத்தானவை. அந்தவகையில் தற்போது இங்கு வைரலாகி வரும் வீடியோவில் நீர்யானைகள் வசிக்கும் பகுதிக்கு பயணிகள் சிலர் படகு மூலம் சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த நீர்யானைகளில் ஒன்று திடீரென்று அந்த பயணிகளை நோக்கி ஆக்ரோஷமாக வந்தது.
இதனால் திகில் அடைந்த அந்த பயணிகள் படகை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பித்தனர். இந்த வீடியோவை இதுவரை 1.2 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
வீடியோவை இங்கே காணுங்கள்:
Although accurate numbers are hard to come by, lore has it that hippos kill more people each year than lions, elephants, leopards, buffaloes and rhinos combined. Don't get close! pic.twitter.com/cc7EbQHs4j
— Hidden Tips (@30sectips) January 3, 2023
இந்த வீடியோ HiddenTips என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
மேலும் படிக்க | சொர்க்கம் பூமியில் வநதுவிட்டதோ? அழகால் அதிசய வைக்கும் நதியின் அதிசய வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ