பாலைவனத்தின் வெந்நீர் ஊற்று! கிணறு தோண்டினால் கிளம்பியது சொர்க்கம்

Desert Water Fountain: கிணறு தோண்டினால், வந்ததோ சொர்க்கம்! வெந்நீரூற்றின் அதிசயக் கதை! பாலைவனத்தின் வெப்பத்தை வெளியேற்றும் வெந்நீரூற்று

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 9, 2023, 04:29 PM IST
  • மனதை மயக்கும் நீரூற்று!
  • ஜாக்கிரதை இது 200F வெப்ப நீரூற்று
  • பாலைவனத்தின் வெப்பத்தை வெளியேற்றும் வெந்நீரூற்று
பாலைவனத்தின் வெந்நீர் ஊற்று! கிணறு தோண்டினால் கிளம்பியது சொர்க்கம் title=

வைரல் வீடியோ: நமது அன்றாட வாழ்க்கையின் அங்கமாக சமூக ஊடகங்கள் இருந்தாலும், பல சிக்கல்களையும் அது ஏற்படுத்துகிறது. விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் உள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகும் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ பலராலும் விரும்பி பார்க்கப்படுகிறது. இது பூமியா இல்லை சொர்க்கமா என்று தோன்றும் அழகிய நீரூற்று இது. இந்த வெந்நீரூற்று இருப்பது பாலைவனத்தில் என்பதால், அந்தப் பாலைவனம் சோலைவனமாகவில்லை. 

நம்மை அதிசயப்படவைக்கும் எந்த வாய்ப்பையும் இயற்கை விட்டு வைப்பதில்லை. சில நேரங்களில் மழையுடன் வானத்தில் வானவில்லின் ஏழு வண்ணங்கள் நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. நம்மை கவிஞர்களாக்கிவிடும் இயற்கை, அதிசயங்களையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. அதில் நீர் மட்டும் விலக்கா என்ன?

மேலும் படிக்க | Dolphin Viral Video: வானவில்லைத் தொடும் டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரல்

வீடியோவானது ட்விட்டரில் @gunsnrosesgirl3 என்கிற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் வண்ணமயமான நீரூற்று இருப்பதை காணலாம். ஆனால், இவ்வளவு அழகானதா நீரூற்று என்ற அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வீடியோ, இந்த வண்ணங்களின் அதிசயத்திற்கான காரணத்தையும் சொல்கிறது. இந்த வீடியோவைப் பார்த்து ரசியுங்கள்...

இந்த வண்ண நீருற்று தரும் அதிசயத்திற்கான காரணம் என்ன? அறிவியல், அழகின் பின்புலத்தையும் சொல்லிவிடுகிறது. இந்த நீரூற்று தற்போது இருக்கும் இடத்தில், 1916 ஆம் ஆண்டு பாலைவனத்தின் நடுவில் பாசனத்திற்காக கிணறு தோண்டப்பட்டது. பாலைவனத்தில் தண்ணீர் தேடிய முயற்சி வெற்றி பெற்றது. ஆனால், வந்ததோ தண்ணீர் அல்ல, வெந்நீர்.

மேலும் படிக்க | அன்னையின் மடியில் சுகம் தேடும் கங்காரு! தாயின் மடியில் பத்து மாசம் பத்தாது வீடியோ வைரல்

அதுவும், 200 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் அதிகமான வெப்பம் கொண்ட கொதிநீர். இந்த வெந்நீரின் ஒரு துளி பட்டாலும், உடல் வெந்துவிடும் அளவுக்கு கொதிக்கும் கொதிநீர். அன்று தொடங்கி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொடரும் இந்த வெந்நீர் ஊற்று, பாலைவனத்தின் வெப்பத்தை வெளியில் கொண்டு வருகிறது.

வெந்நீர் ஊற்றுக்கான காரணம் தெரிந்துவிட்டது. அதன் அழகுக்கான காரணம் என்ன? அந்தப் பகுதியில் உள்ள கால்சியம் கார்பனேட் படிவுகள் கூம்பு வடிவத்தில் உருவாகி, வண்ணமயமான தெர்மோபிலிக் ஆல்காவை உருவாக்குகின்றன.

இந்த கால்சியத்தின் படிமங்கள், இப்படி வண்ணமயமான குன்றுகளைப் போல தோற்றமளிக்கின்றன. இதுபோல, வண்ணங்களின் கலவைகளைக் கொண்ட வெந்நீரூற்றுகள் உலகில் பல இடங்களில் உள்ளன. வெப்ப நீரூற்றுகளில் தெர்மோபிலிக் பாசிகள் காணப்படுவது சகஜம் தான். கிணறு தோண்டினால், வந்ததோ சொர்க்கம்! வெந்நீரூற்றின் அதிசயக் கதை சொல்லும் நீரூற்று இது.

மேலும் படிக்க | சொர்க்கம் பூமியில் வந்துவிட்டதோ? அழகால் அதிசய வைக்கும் நதியின் அதிசய வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News