வேலைக்கு சம்பளம் என்பது வேலையின் தன்மையை பொறுத்து முடிவு செய்யப்படும். ஆனால் சிலருக்கு கிடைக்கும் வேலை கடினமாக இருந்தாலும் சம்பளம் மட்டும் குறைவாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாகவே, ஈசி மணி, நோ டென்சன் என்ற பாலிசியில் தான் பலர் இருப்பார்கள். ஆனால், நம்முடைய பாலிசி என்னவாக இருந்தாலும், வேலை கொடுப்பவர் தான் சம்பளத்தை நிர்ணயிப்பவர் என்பதால், பலர் சம்பள விஷயத்தில் அதிருப்தியாகவே இருப்பார்கள்.


ஆனால், கேட்கும்போது வேலை சுலபமானதாக தோன்றினாலும், பணியிடம் எங்கே என்பதைப் பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்படும்.


உதாரணமாக, பல்பு மாட்டும் வேலைக்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றால், எங்கப்பா, நான் போறேன் என்று பலர் முன் வருவார்கள்.


ALSO READ | பிளிரும் பெண் சிங்கத்தின் கர்ஜனையின் பின்னுள்ள ரகசியம் தெரியுமா?  


பல்பு மாட்டுவது சுலபமான வேலை தான். ஆனால், மாட்டப்படும் பல்பு இருக்கும் இடம் எங்கு என்பது தெரிந்தால், இந்த வேலையை அசால்டாக நினைப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.


அதனால் தான், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. 



ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு ஏதாவது ஒரு வேலை செய்கிறார்கள். கொரோனா நெருக்கடி (COVID-19) மற்றும் லாக்டவுன் பலரின் வேலைகளை அழித்துவிட்ட நிலையில், சிலரின் வேலைக்கோ எப்போது ஆப்பு வரும் என்று தெரியாது. 


சிலர் இன்னும் புதிய வேலையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இரண்டாயிரம் அடி ஏறி வானொலி நிலையத்தின் பல்பை மாற்றும் வேலைக்கு 40 ஆயிரம் சம்பளம் கொடுத்தால் அது குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டார் இந்த மனிதர்.  


மேலும் படிக்க | அணைக்கட்டு மீது தனியாக நடக்கும் குழந்தை - பதைபதைக்க வைக்கும் வீடியோ


வானொலி நிலைய விளக்கை மாற்றுதல்
ரேடியோ டவரில் மின்விளக்கை மாற்ற 1700 முதல் 2000 ஆயிரம் அடி வரை ஏற வேண்டும். விண்ணை முட்டும் உயரத்திற்கு சென்று விளக்கை மாற்ற வேண்டும் என்று சொன்னால், இந்த வேலையே வேண்டாம் என்று சொல்லலாம். 


எல்லோராலும் ஆபத்தான செயல்களைச் செய்ய முடியாது
வேலை ஆபத்தானது என்பதால், அத்தகைய வேலைக்கு உயரத்தில் ஏறுபவர்கள் அல்லது டவர் இன்ஜினியர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த நபர்கள் கோபுரத்தில் உள்ள உபகரணங்களின் பராமரிப்பு, ஆய்வு மற்றும் பழுதுபார்ப்புக்கு பொறுப்பானவர்கள்.


கீழே விழுந்தால் மரணம் நேரிடும் என்பதால், விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பிற்காகவும் மட்டுமே அவர்கள் சேனலைப் பயன்படுத்துகின்றனர்.விபத்து ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு விதிகளின்படி செயல்பட வேண்டும். 


 


இதுபோன்ற வேலைகளைச் செய்பவர்கள் காற்று மற்றும் அனைத்து வகையான வானிலைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த வீடியோவைப் பார்த்தால், அதன் உண்மை புரியும்.  


இந்த கோபுரத்தில் ஏறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்றால் வியப்பொன்றும் இல்லை.


இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கீத் வில்லியம்ஸ், வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே மின்விளக்கை மாற்ற வேண்டும் என்றும், ஊழியருக்கு 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மில்லியன் கணக்கான மக்கள் இதுவரை பார்த்துள்ளனர் மற்றும் பல சமூக ஊடக தளங்களில் இது பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளியை பார்த்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | வைரல் வீடியோ: முதலையை புரட்டி எடுக்கும் சிறுத்தை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR