`தம்பி...போய் ஓரமா நில்லு`: சீண்டிய காண்டாமிருகத்தை வெச்சி செஞ்ச யானை, வைரல் வீடியோ
Wild Animal Fight Video: காட்டில் யானைக்கும் காண்டாமிருகத்துக்கும் நடக்கும் ஒரு சண்டை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
யானை மிகவும் அமைதியான விலங்காகக் கருதப்பட்டாலும், அது கோபமடைந்தால், காட்டில் பீதியை உருவாக்குகிறது. இதற்கு சான்றாக நாம் பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் பார்த்திருக்கிறோம். தற்போதும் அது போன்ற ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
காட்டுப் பகுதியில் யானை ஒன்று அமைதியாக சென்று கொண்டிருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. அப்போது அதை சீண்டும் தவறை ஒரு காண்டாமிருகம் செய்து விடுகிறது. அதன் பிறகு 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற கூற்றுக்கு ஏற்ப யானையின் செயல் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. காண்டாமிருகம் அதிர்ந்து போகும் ஒரு வடிவத்தை யானை எடுக்கின்றது.
காண்டாமிருகத்துடன் சண்டையிட்ட யானை
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் யானையின் முன் காண்டாமிருகம் சண்டை இடும் தோரணையில் நிற்பதை காண முடிகின்றது. அது யானைக்கு ஓப்பன் சேலஞ்ச் கொடுப்பது போல தெரிகிறது. முதலில் யானை காண்டாமிருகத்தை அலட்சியப்படுத்தினாலும் பின்னர் அது கோபமடைகிறது. அது காண்டாமிருகத்தை விடுவதாக இல்லை. அதற்கு பாடம் புகட்ட முடிவு செய்கிறது. யானை தந்த பதிலில் காண்டாமிருகம் தன் தவறை உணர்கிறது. யானையின் பலத்தை குறைத்து மதிப்பிட்டது அதற்கு புரிகிறது. இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | வர்லாம்..வர்லாம் வா...: டிராக்டரின் முன் மாஸ் காட்டும் அம்மா பறவை, வைரல் வீடியோ
யானையின் மாஸ் வீடியோவை இங்கே காணலாம்:
யானை மற்றும் காண்டாமிருகத்தின் இந்த சண்டை தொடர்பான வீடியோ waowafrica என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | படையப்பா ரஜினி ஸ்டைலில் 15 அடி நீள பாம்பை கையில் பிடித்த நபர்: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ