ஒரு நிமிசம் தலையே சுத்திருச்சு... பைக்க எங்கெல்லாம் ஓட்டுறாங்க பாருங்க!

Bike Stunt Viral Video : எத்தனையோ பைக் சாகச வீடியோவை பாத்திருப்பீர்கள், ஆனால் இந்த வீடியோவை முழுமையாக பார்ப்பதே மிகப்பெரிய சாகசம் என்றால் மிகையாகாது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 31, 2022, 09:21 AM IST
  • இந்த வீடியோவை ட்விட்டரில் அதிகமானோர் பார்த்து வருகின்றனர்.
  • இந்த வீடியோவில் காணும் சாகச்சத்தை பயிற்சியில்லாத யாரும் முயல வேண்டாம்.
ஒரு நிமிசம் தலையே சுத்திருச்சு... பைக்க எங்கெல்லாம் ஓட்டுறாங்க பாருங்க! title=

Bike Stunt Viral Video : பைக், கார் ஓட்டுவது என்பது சாதராணமானது அன்று. நகரத்தின் தார் சாலைகளோ, கிராமத்தின் மண் சாலையோ, மலைப்பகுதிகளோ அனைத்திலும் அபாயங்கள் நிறைந்திருக்கின்றன. உடலும், மனமும் ஒத்திசைந்தால் மட்டுமே அதனை ஆபத்தின்றி இயக்க இயலும். 

சாதரணமாக ஓட்டுவதே இப்படியென்றால், பைக், கார்களில் சாகசம் செய்வோர்களின் திறனும், மனக்கட்டுப்பாடும் அளவிட இயலாதது. அதிவேகமாக செல்வது, ரேஸ் செய்வது மட்டுமின்றி, கடும் தடுப்புகளுக்கு இடையில் ஓட்டுவதும் பெரும் சாகசங்களாக  கருதப்படுகிறது. மோட்டர் வாகனங்கள் மீது உலகம் முழுவதும் தீரா காதல் கொண்டு அலையும் பலரும் இதுபோன்ற சாகசங்கள் கடும் பயிற்சி மேற்கொண்டு செய்துவருகின்றனர். 

ஆனால், பலருக்கும் அதுபோல் சாகசம் செய்ய வேண்டும் என ஆசை மேலாங்கியிருக்கும். ஆனால், முறையான பயிற்சியும், தொழில்முறை பயிற்றுநரும் இன்றி அவற்றை முயன்று பார்ப்பது மிக மிக ஆபத்தான ஒன்று. எனவே, பலரும் மற்றவர்களின் அசகாய சூர சாகச வீடியோக்களை அதிகமாக பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதோபோல், மிகவும் வழுக்குத் தன்மையுள்ள செங்குத்தான மலையில் பைக்கை ஓட்டிச்செல்லும் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | கதறி அழும் காகம், குத்திக்கிழித்த கோழி: நம்ப முடியாத வைரல் வீடியோ

அந்த வீடியோவில் சாகசம் மேற்கொள்பவர் தொழில்முறையாக சாகசம் மேற்கொள்பவர் என தெரிகிறது. எனவே, இந்த வைரல் வீடியோவை பார்ப்பவர்கள், பரப்புவர்கள் இதனை முயன்று பார்க்க வேண்டாம் என்று இணையவாசிகள் அறிவுரை கூறியுள்ளார்கள். 

அந்த வீடியோவில், சமதளப்பகுயில் இருந்து போகும் மோட்டார் பைக் வேகமாக சென்று சில அடி தூரங்களில் இருந்த செங்குத்தான மலையில் ஏறுவதைத் தொடங்குகிறது. அவர் மலை மீது ஏறி செல்வது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், மிகச்சிறிய அளவில் பைக்கின் வடிவம் தெரிகிறது. மேலும், மலையில் பாதையில் உள்ள அடையாளங்களை பார்க்கும்போது, அதற்கு முன் ஒருவர் அதே பாதையில் சென்றிருக்கலாம் என தெரிகிறது. 

அவர் பாதி மலையில் ஏறிய பின்னர், சற்று சிரமப்படுவது போல் வீடியோவில் தெரிகிறது. அவருக்கு இருபுறமும் பைக் சறுக்கியது. பாதை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அந்த பைக்கர் தனது இலக்கை அடைந்து பாதுகாப்பாக உச்சியை அடைவது வீடியோவில் தெரிகிறது. 

இந்த வீடியோ லோ+வைரல் என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த பதிவில், "சில நேரங்களில் சாத்தியமற்றதும் சாத்தியமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோ ட்விட்டரில் ஏற்கனவே 7 லட்சத்திற்கு அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், தொடர்ந்து அதிகமானோர் ரீ-ட்வீட்டும் செய்து வருகின்றனர். இந்த வீடியோவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

மேலும் படிக்க | Viral Video: பனி புயலால் உண்டான விபரீதம்! பனியால் உறைந்த மானின் முகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News