வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


இன்றைய திருமணங்களில் பல்வேறு வகையான விஷயங்கள் காணப்படுகின்றன. நிச்சயம் முதல் முகூர்த்தம், பின்னர் திருமண அழைப்பு என அனைத்து சடங்குகளிலும் பல புதுமைகளை நாம் தினமும் காண்கிறோம். இவற்றில் சில விஷயங்களை நாம் திட்டமிட்டு செய்கிறோம். சில தானாக நடக்கின்றன. 


மேலும் படிக்க | மணமகளை பார்த்து தேம்பி அழுத மணமகன், காரணம் இதுதான்: வைரல் வீடியோ 


திருமண சீசனில் தினமும் நூற்றுக்கணக்கான திருமணம் தொடர்பான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மணமக்களின் எண்ட்ரி, அவர்களின் வேடிக்கைகள், மாலை மாற்றும் நிகழ்ச்சி, ஆடல் பாடல் என பல வித நிகழ்வுகளை நாம் காண்கிறோம். 


தற்போது சமூக வலைதளங்களில் ஒரு திருமணத்தின் மாலை மாற்றும் சடங்கின் வீடியோ வைரலாகி வருகிறது. இதில் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? இதில் மணமக்களுக்கு மாலை போட யானை ஒன்று வந்துள்ளது!!


மாலை மாற்ற வந்த யானை


வைரலாகி வரும் இந்த வீடியோவில் மாலை மாற்றும் சடங்கின் போது, மகிழ்ச்சியான சூழல் நிலவுவதை காண முடிகிறது. மணமகனும், மணமகளும் அவர்களது குடும்பத்தினருடன் மேடையில் உள்ளனர். அடுத்த நொடியே ஒரு யானை திருமணத்திற்குள் நுழைகிறது. அதைப் பார்த்து அங்குள்ள விருந்தினர்கள்  அதிர்ச்சியடைகின்றனர். யானை முதலில் மணமகளுக்கும் பின்னர் மணமகனுக்கும் மாலை அணிவிக்கிறது. 


பின்னர் அது மணமக்களுக்கு தனது ஆசியையும் வழங்குகிறது. இதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். திருமணத்திற்கு வந்தவர்கள் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இதை பார்ப்பவர்களும் மனம் நெகிழ்ந்து போகிறார்கள். 


மனதை நெகிழ வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



இப்படி ஒரு காட்சியை பார்த்திருக்க முடியாது


வைரலாகி வரும் இந்த வீடியோவில் காணப்படுவது போன்ற காட்சி பொதுவாக எங்கும் காணப்படுவதில்லை. இந்த வீடியோ comedynation.teb என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பலவித லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 


மேலும் படிக்க | மணமகள் மீது பைத்தியம் ஆன மணமகனின் குத்தாட்டம்: வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR