காட்டெருமையை சிங்கம் துரத்தி துரத்தி வேட்டையாடும் வீடியோ

காட்டெருமை ஒன்றை சிங்கம் துரத்தி துரத்தி வேட்டையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.     

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 14, 2022, 06:15 PM IST
  • காட்டெருமையை வேட்டையாடும் சிங்கம்
  • துரத்தி துரத்தி வேட்டையாடுகிறது
  • சுற்றுலாப் பயணிகள் நேரில் பார்த்து அதிர்ச்சி
காட்டெருமையை சிங்கம் துரத்தி துரத்தி வேட்டையாடும் வீடியோ title=

சிங்கத்தின் வேட்டை துல்லியமாகவும், கொடூரமாகவும் இருக்கும். மிகப்பெரிய விலங்கையும் அசால்டாக அடித்து கீழே விழ வைத்து வேட்டையாடிவிடும். அதில் வேட்டையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் அல்லது அந்த சிங்கம் வயதானதாக இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் இருந்துவிட்டால் அன்றைய தினம், இலக்கு வைக்கும் விலங்கின் வாழ்நாள் அன்று தான் கடைசி என நினைத்துக் கொள்ள வேண்டும். கொடும் பசியில் இருக்கும் ஒரு சிங்கம் எவ்வ்வு தொலைவில் ஒரு விலங்கு இருந்தாலும், துரத்திச் சென்றே அடித்து வேட்டையாடும்.

மேலும் படிக்க | போச்சா....: சீன் போட போய் சட்டை பறிபோன பரிதாபம், வைரல் வீடியோ

அப்படியான வீடியோ ஒன்றுதான் காண்போரை பதைபதைக்க வைக்கிறது. காட்டெருமை ஒன்றை சிங்கத்தின் இலக்கில் வந்து மாட்டிக் கொள்கிறது. காத்திருந்த சிங்கம் விட்டுவிடுமா என்ன?. இதுதான் வாய்ப்பு என்று புயல்வேகத்தில் பாய்ந்து காட்டெருமையை வேட்டையாடிவிடுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் வாகனம் இருப்பதைக் கூட சிங்கம் கண்டு கொள்ளவில்லை. வேகமாக ஓடும் காட்டெருமையை பாய்ந்து ஓடி அடித்து, கழுத்தை கவ்வுகிறது. காட்டெருமையும், எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் காலுக்குள் சிக்கிய சிங்கத்தை மிதிக்கிறது. 

இந்த இடத்தில் தான் சிங்கத்தின் சாமார்த்தியத்தை வீடியோவில் பார்க்க முடியும். கழுத்தை கவ்விய சிங்கம், மிதிப்பட்டாலும், தன்னுடைய பிடியை விடவில்லை. இறுதிவரை மிகவும் இறுக்கமாக பிடித்து காட்டெருமையை சாய்த்து வேட்டையாடுகிறது. இறுதிவரை போராடிய காட்டெருமைக்கு தோல்வி தான் மிஞ்சுகிறது. இந்தக் காட்சி பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பதைபதைக்க வைக்கிறது.  

மேலும் படிக்க | போர்வையை பேய் என நினைத்து பயந்து ஓடிய யானைக்குட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News