வைரல் வீடியோ: செய்திகள், அச்சு ஊடகத்தில் மட்டுமே பிரதானமாக இருந்த காலம் மாறி, வீடியோக்களாகவும், டிஜிட்டல் முறைக்கும் மாறிவிட்டன. தற்போது அனைவரின் கைகளிலுமே உலகம் அடங்கிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு, மொபைல் போன்களின் வீச்சு இருக்கிறது. வீடியோ செய்திகள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுகின்றன. செய்திகள், ஃபேஷன், கல்வி உட்பட பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்கிறோம். ஆனால், அன்பை வெளிப்படுத்தும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன. விலங்குகள் வீடியோக்கள் பரவசப்படுத்தினாலும், பயப்படுத்தினாலும் பார்க்கப்பட்டாலும், மனதை நெகிழச் செய்யும் அன்பை வெளிப்படுத்தும் வீடியோக்களுக்கென ரசிகர் பட்டாளமே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயதான தம்பதிகளுக்கு இடையேயான அன்பை வெளிப்படுத்தும் வீடியோக்கள் எப்போதும் மனதைக் கவருபவை. திருமணம் முடிந்து நீண்ட நாட்களுக்குப் பிறகும், தம்பதிகள் ஒருவரையொருவர் நேசிப்பதும் அக்கறை செலுத்துவதும் மனதை நெகிழச் செய்பவை.


மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா?


வாழ்நாள் முழுவதும் ஒன்றாகக் கழித்தாலும், அலுப்போ சலிப்போ இல்லாமல் காதலை வெளிப்படுத்தும் வயதான தம்பதியினரின் நேச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், வயதான பெண் ஒருவர், தனது கணவர் மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும்போது அவருக்காக பாடல்களைப் பாடுகிறார்.


முதியவர் 70 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று வீடியோவுடன் வெளியிடப்பட்ட செய்தி, சேதி சொல்கிறது. வயதான பெண்மணி மருத்துவமனையில் தனது கணவரின் படுக்கைக்கு அருகில் அமர்ந்து, அவரது கையைப் பிடித்து காதலுடன் கசிந்து பாடுகிறார்.


பிரபலமான போர்த்துகீசிய பாடலான Como é Grande o meu amor por você என்ற பாடலைப் பாடும் தனது காதல் மனைவியை, அன்புக் கணவர் வாஞ்சையுடன் பார்த்து, முகத்தைத் தடவிக் கொடுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.


மேலும் படிக்க | சிங்கிளாக வந்து சிங்கக்கூட்டத்தை சிதறடிக்கும் ஆக்ரோஷமான விலங்கு


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் குட் நியூஸ் மூவ்மென்ட் என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. "காதல் நித்தியமானது: 70 வருடங்கள்! 70 நீண்ட நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் கணவருக்காக மனைவி பாடும் தாலாட்டுப் பாட்டு" என்ற வாசகங்களைக் கொண்ட வீடியோ வைரலாகிறது.  வைரலாகும் காதல் பாடலை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?



வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றார்களாம்!


"இந்த பாடல் வரிகள் போர்ச்சுகீசிய மொழியில் இருந்தாலும் "நான் உங்களிடம் சொல்ல நிறைய இருக்கிறது, ஆனால் உங்கள் மீதான என் காதல் எவ்வளவு பெரியது என்று சொல்ல வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை..." என்று சொல்வது மனதை நெகிழச் செய்கிறது என்று எழுதியுள்ளார்.


என்னை திணறடிக்கும் காதல் இது என்று மற்றொருவர் சொன்னால், “உண்மையான அன்பு இது! நோயும், ஆரோக்கியக் குறைவும் காதலை ஒன்றும் செய்யாது என்பதைக் காட்டுகிறது என்கிறார் மற்றும் ஒருவர்.


காதலும் நேசமும் எப்போதும் விலைமதிப்பற்றவை என்று மற்றொரு நெட்டிசன் சொல்வது உண்மை தானே?


மேலும் படிக்க | பாய்ந்து வந்து மானை தாக்கும் சிங்கம்! தப்ப முடியாமல் கதறும் காட்டு மான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ