கொரோனா முழு அடைப்பால் பிரபலமான தவளை கறி; வைரலாகும் Video!
உண்மையில் கொரோனா வைரஸின் பயம் சிலரின் உணவுப் பழக்கத்தை நாம் பார்க்கும் முறையையும் மாற்றிவிட்டது என்றால் மிகையில்லை. அந்த வகையில் சிலர் தற்போது தவளை கறி நோக்கி பயணம் செய்ய துவங்கியுள்ளனர்.
உண்மையில் கொரோனா வைரஸின் பயம் சிலரின் உணவுப் பழக்கத்தை நாம் பார்க்கும் முறையையும் மாற்றிவிட்டது என்றால் மிகையில்லை. அந்த வகையில் சிலர் தற்போது தவளை கறி நோக்கி பயணம் செய்ய துவங்கியுள்ளனர்.
கொரோனா அச்சத்தின் காரணமாக பலர் கோழி உள்பட பல அசைவ வகை உணவுகளில் இருந்து விலகியுள்ளனர். கொரோனா குறித்து வளர்ந்து வரும் அச்சங்களுக்கு மத்தியில், ஒரு வினோதமான வீடியோ தற்போது ஆன்லைனில் வெளியாகி மக்களின் உணவு பழக்கத்தை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் இறைச்சி விற்பனைக்காக தோலுரித்து வைக்கப்பட்ட ஒரு தவளை தவழ்ந்து ஓடுகிறது. விற்பனைக்காக தயார் செய்து வைக்கப்பட்ட இறைச்சி தட்டில் இருப்பது தவளை என்றால், மக்கள் தற்போது கோழிகளை விட்டுவிட்டு தவளை கறி தேடி சென்றுவிட்டனரா? என கேள்வியை தூண்டுகிறது. பெரும் சந்தேகத்தை தூண்டியுள்ள இந்த வீடியோவை பிரபல சமூக ஊடக தளமான 9Gag பகிர்ந்துள்ளது.
READ | வாரனாசியில் மழை வேண்டி பொம்மை தவளை-க்கு திருமணம்!
இந்த இடுகை மிகவும் குறுகிய கிளிப் ஆகும், சுமார் 10 வினாடிகள் வரை மட்டுமே ஒளிப்பரப்பாகும் இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்ட வீடியோக்களில் இடம்பிடித்துள்ளது. இந்த வீடியோவில் ஏராளமான மூல தவளைகள் தட்டில் வைக்கப்பட்டுள்ளன, ஆனால் அவற்றில் ஒன்று உயிருடன் காணப்படுகிறது, அநேகமாக அதன் கால்களை மீண்டும் மீண்டும் செலுத்தி தப்பிக்க முயற்சிப்பது போல் தெரிகிறது.
இந்த வீடியோ மிகவும் வினோதமானது, அதாவது இந்த வீடியோ உங்கள் பசியைக் கூட மறக்கச்செய்யும். முன்னதாக கடந்த ஆண்டு இணையத்தில் வைரலான ஜாம்பி கோழியின் வீடியோவை நமக்கு இந்த வீடியோ தற்போது நினைவூட்டுகிறது.
நகரும் மூல தவளை இறைச்சியின் வீடியோவைப் பாருங்கள்:
இந்த வீடியோ எங்கே படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 9Gag இடுகையில் உள்ள ஒரு கருத்து, தவளை ஏன் உயிருடன் இருக்க முடியும் என்பதற்கு ஒரு விளக்கத்தை அளிக்கிறது. குறிப்பிட்டுள்ள கருத்துக்களில் ஒன்று, இந்த விலங்குகளுக்கு உப்பு போடுவது தசைகள் சுருங்குவதற்கான சமிக்ஞையை வழங்குகிறது. உப்பில் சோடியம் இருப்பதால், மின் தூண்டுதல் முறைக்கு பயன்படுத்தப்படுகிறது மற்றும் இதன் காரணமாக அதன் கால்கள் சுருங்கி விரிகிறது. பயனரின் இந்த விளக்கம் ஏற்க்கூடியதாக இருந்தாலும், இந்த வீடியோ எவ்வாறாயினும் வினோதமான வீடியோக்களில் ஒன்றாக தான் பார்க்க முடியும்.
READ | கொரோனாவை பரப்பும் வௌவால்களை கொரோனா ஏன் அழிப்பதில்லை...