சட்ட சிக்கலில் பூனம் பாண்டே: கோவாவில் ஆபாச வீடியோவை படம்பிடித்ததற்காக நடிகைக்கு எதிராக FIR
நிர்வாண வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, கோவா காவல்துறை புதன்கிழமை நடிகை பூனம் பாண்டே மற்றும் தெரியாத நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
FIR Against Poonam Pandey: தனது கவர்ச்சி வீடியோக்களால் பிரபலமான நடிகர் பூனம் பாண்டே (Poonam Pandey), கோவாவில் இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கனகோனாவில் உள்ள சபோலி அணை (Chapoli Dam) தளத்தில் அவரது நிர்வாண வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, கோவா காவல்துறை சார்பில் புதன்கிழமை நடிகை பூனம் பாண்டே மற்றும் தெரியாத நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் எதிர்க்கட்சியான கோவா ஃபார்வர்டின் புகாரைத் தொடர்ந்து எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது என என்று ANI ட்வீட் செய்துள்ளார்.
கோவா அரசாங்கத்தின் நீர்வளத்துறைக்குச் சொந்தமான ஒரு இடத்தில் பாண்டே ஒரு எப்படி"ஆபாச" போட்டோஷூட் நடத்தலாம் எனக் குற்றம்சாட்டிய Goa Forward கட்சியின் மகளிர் அணி, தெற்கு கோவா போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தது. இதுக்குறித்து பங்கஜ் சிங் கூறுகையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 294 (ஆபாசமான) பிரிவின் கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ALSO READ | நிர்வாண வீடியோ வெளியிட்ட சர்ச்சை நடிகை....மொய்க்கும் நெட்டிசன்ஸ்!
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் (Goa CM Pramod Sawant)மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பிலிப் நேரி ரோட்ரிக்ஸ் ஆகியோரை ராஜினாமா செய்ய கோவா ஃபார்வர்டின் துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான துர்கதாஸ் காமத் கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறும்போது, "பூனம் பாண்டேவின் வீடியோ கோவாவில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ கனகோனாவில் உள்ள சபோலி அணையில் படமாக்கப்பட்டது. இந்த பகுதி மிகவும் பாதுகாப்பானது மற்றும் கோவா அரசாங்கத்தின் நீர்வளத் துறையின் சொத்து. கோவாவில் என்டர்டெயின்மென்ட் சொசைட்டி (Entertainment Society of Goa) பொதுவாக கோவாவில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கிறது. இந்த ESG அமைப்புக்கு முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தான் தலைவர். பாஜக அரசு கோவாவை ஆபாச இடமாக ஊக்குவித்து வருகிறது. இது மாநிலத்திற்கு கெட்ட பெயரைக் கொண்டுவருகிறது. என்று காமத் ANI இடம் தெரிவித்துள்ளார்.
ALSO READ | 'நாங்கள் மீண்டும் ஒன்றாக இருக்கிறோம்' கணவருடன் Bigg Boss பிரபலம்!!
பூனம் சமீபத்தில் தனது காதலன் சாம் பம்பாயை (Sam Bombay)திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டு வாரங்களுக்குள் அவர்களது திருமண வாழ்க்கையில் ஒரு பிளவு ஏற்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியது. தேனிலவுக்கு சென்ற போது பூனம் பாண்டேவை அவரது கணவர் அடித்ததாகக்க கூறி, சாம் பம்பாய்க்கு எதிராக புகார் அளித்தார். அதன்பிறகு போலீசாரும் சாமை கைது செய்தனர்.
ALSO READ | காதலனுடன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!
ஆனால் பின்னர் பூனம் பாண்டே தனது கணவர் மீதான புகாரை வாபஸ் பெற்றார். அதன் பிறகு பூனத்தின் கணவருக்கும் ஜாமீன் கிடைத்தது. இருப்பினும், இப்போது இருவருக்கும் இடையில் உறவு நன்றாக இருக்கிறது. இது குறித்து பூனம் பாண்டேவேத் தெரிவித்தார். மேலும் சமூக ஊடகக் கணக்கில் சில போட்டுக்களையும் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR