வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாய்கள் மிகவும் விரும்பப்படும் செல்லப்பிராணிகள். நாய்கள் மனிதனின் சிறந்த நண்பர்களாக பார்க்கப்படுகின்றன. வீட்டில் நாய் உள்ளவர்கள் அவற்றையும் வீட்டின் உறுப்பினர்களாகவே பார்க்கிறார்கள். நாய்களும் வீட்டில் உள்ள நபர்களுடன் அளவு கடந்த பாசத்துடன் நடந்துகொள்கின்றன. சமூக ஊடகங்களில் நாய்களின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவற்றுக்கு இணையவாசிகளிடம் அதிக வரவேற்பும் கிடைக்கின்றன. 


நம் அனைவரின் வாழ்விலும் நாய்கள் பெரும் பங்காற்றுகின்றன. நாய்கள் மனிதர்களை, சக மனிதர்களை விட நன்றாக புரிந்துகொள்ளும் விலங்குகள். நம் அன்றாட வாழ்வில் அவை நமக்கு பல உதவிகளை செய்கின்றன. அது மட்டுமல்லாமல், நாய்கள் அதிக திறன் படைத்தவை. அவற்றுக்கு முறையாக பயிற்சி அளித்தால், அவை பல வேலைகளில் நமக்கு உதவுகின்றன. நாய்கள் விசுவாசத்திற்கும் பெயர் பெற்றவை. கடினமான தருணங்களில் நமக்கு துணையாக இருக்கும். பல வித வித்தைகளையும் செய்து காட்டி நம்மை மகிழ்விக்கும். 


மேலும் படிக்க | நாய்களிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு: திகிலூட்டும் வைரல் வீடியோ


பயிற்சி பெற்ற நாய் 


சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. வைரலான வீடியோவில் நாய் ஒன்றை காண முடிகின்றது. நாய் வாயில் ஒரு தண்ணீர் கிளாசை வைத்துக்கொண்டு நடந்து வருகிறது. நாய் ஒரு சிறந்த சமநிலையைக் காட்டுவதை இந்த வீடியோவில் தெளிவாகக் காண முடிகின்றது. நாய் வாயில் தண்ணீர் குவளையுடன் மிகவும் லாவகமாக நடப்பதை வீடியோவில் தெளிவாகக் காண ஆச்சரியமாக உள்ளது. வீடியோவைப் பார்க்கும்போது அந்த நாய்க்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. வீடியோவில் ஒரு இடத்தில் ஒரு கணம் நாய் தண்ணீர் குவளையை கீழே போட்டுவிடும் என்று தோன்றுகிறது. ஆனால் அப்படி நடக்கவில்லை. நாய் சூப்பராக அதை தாங்கியபடி நடந்து செல்கிறது. 


நாயின் சூப்பர் டேலண்டை காட்டும் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் malinois.loyal என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'என்ன அருமையான திறமை' என ஒரு பயனர் நாயை பாராட்டியுள்ளார். 'நாய்க்கு மிகச் சரியான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது' என்று மற்றொரு பயனர் எழுதியுள்ளார். மற்றொரு பயனரோ, 'அதற்கு இதைச் செய்ய விரும்பவில்லை என்று தோன்றுகிறது... நாய்களை ஏன் தொந்தரவு செய்கிறார்கள்' என விமர்சித்துள்ளார்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | டேய்! நீ ஏண்டா இப்படி பொறுப்பில்லாம இருக்க? அதட்டும் யானை அம்மா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ