துடிதுடிக்கும் கன்றுக்குட்டி... கபளீகரம் செய்யும் கொமோடோ டிராகன்... மனம் பதற வைக்கும் வீடியோ

Viral Video: ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு வீடியோவில், கொமோடோ டிராகன் கன்று குட்டி ஒன்றை தாக்கி ஒரே அடியாக விழுங்கும் அதிர்ச்சியான காட்சியை காணலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 9, 2023, 05:09 PM IST
  • கொமோடோ டிராகன்கள் மிகப்பெரிய மற்றும் கனமான பல்லிகள் ஆகும்.
  • வீடியோ இணையம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது.
  • மனம் பதற வைக்கும் வீடியோ
துடிதுடிக்கும் கன்றுக்குட்டி... கபளீகரம் செய்யும் கொமோடோ டிராகன்... மனம் பதற வைக்கும் வீடியோ title=

காட்டு வாழ்க்கையே வாழ்வா சாவா போராட்டம் நிறைந்தது தான்.  வல்லவன் வாழ்வான் என்ற விதி சிறப்பாக பொருந்தக்கூடிய இடம். காடுகளில் பெரிய வேட்டை போராட்டங்களை காட்டும் பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் பல நம் ரத்தத்தை உறைய வைத்து விடும். தற்போது, ​​கொமோடோ டிராகன் கன்றுக் குட்டி தாக்கி, அதை உயிருடன் விழுங்கும் திகில் வீடியோ வெளியாகியுள்ளது. மான் கொமோடோ டிராகனின் பிடியிலிருந்து வெளியேற முயற்சிக்கிறது, ஆனால் அதன் அனைத்து முயற்சிகளும் வீணாகின்றன.

டிவீட்டர் பதிவு ஒன்றில் வெளியிடப்பட்ட வீடியோவில், கொமோடோ டிராகன் கன்று குட்டி ஒன்றை அதன் ரேஸர்-கூர்மையான பற்களால் தாக்குவதைக் காணலாம். கன்று குட்டியால் எதிர்த்துப் போராட முடியவில்லை. சில நொடிகளில், கொமோடோ டிராகன் கன்று  மீது பாய்ந்து, ஒரே அமுக்காக அமுக்கி விலங்கை முழுவதுமாக விழுங்குகிறது. ஒரே அடியாக கன்றுக் குட்டியை விழுங்கும் காட்சி உண்மையில் மனதை பதற வைக்கிறது.

மனம் பதற வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ இணையம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது. இது குறித்து சரமாரியான கருத்துகளை பயனர்கள் பதிவு செய்துள்ளனர். ஒரு பயனர் , "இயற்கை அதன் காரியத்தைச் செய்கிறது" என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், "இது மிகவும் வேதனையானது.. கன்றுக் குட்டி உருவில் மிக சிறியது, அதனால் வலி மிகப்பெரியது!" என எழுதியுள்ளார்.

கொமோடோ டிராகன்கள் நீளமான வால்கள், வலுவான மற்றும் சுறுசுறுப்பான கழுத்துகள் மற்றும் வலுவான மூட்டுகள் கொண்ட மிகப்பெரிய மற்றும் கனமான பல்லிகள் ஆகும். இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டவை இவை. காட்டு டிராகன்கள் பொதுவாக சுமார் 154 பவுண்டுகள் (70 கிலோ) எடையுள்ளதாக இருக்கும், ஆனால் மிகப்பெரிய முழுவதுமாக வளர்ந்த கொமோடோ டிராகம்,  10.3 அடி (3.13 மீ) நீளத்தை எட்டக் கூடியது. அதோடு 366 பவுண்டுகள் (166 கிலோ) எடை கொண்டது. 

சில நாட்களுக்கு முன் கழுகின் மீன் வேட்டை ஒன்று மிகவும் வைரலாகியது. வைரலாகிய அந்த வீடியோவில், கழுகு ஒன்று, தண்ணீரில் சீறிப்பாய்ந்து, மிக அழகாக வேட்டையாடுகிறது. நொடியில் அதை பிடித்து விடும் கழுகு, தண்ணீரில் பாய்ந்து வேட்டையாடிய மீனை மிகவும் கெட்டியாக வலுமாக, தனது அலகுகளால் பிடித்துக் கொள்கிறது. நீரில் வேட்டையாடிய மீனை, தாமதிக்காமல் நொடி பொழுதில் வானில், மீன் உயிருடன் இருக்கும் போதே, ருசி பார்க்கும் அந்த கழுகின் ஆற்றலை கண்டு இணையவாசிகள் வியந்துள்ளனர். அதனை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

மேலும் படிக்க | Viral Video: வியக்க வைக்கும் ‘சூப்பர் ஸ்டார் கழுகு’... நீரில் மீன் வேட்டை... நடுவானில் மீன் விருந்து..!!

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News