என்னடா நடக்குது இங்க.. கொத்து கொத்தாக பாம்புகளை வைத்து மானமேடையில் இப்படியா: வீடியோ வைரல்

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் எப்படி இத்தனை பாம்புகள் வந்தன. வைரலான வீடியோவில், திருமண விழாவில் நபர் ஒருவர் தனது பையில் இருந்து கொத்து கொத்தாக பாம்பை வெளியே எடுக்கத் தொடங்குவதை நீங்கள் காண்பீர்கள். இந்த காணொளியை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 9, 2023, 07:11 PM IST
  • இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
  • கொத்து கொத்தாக பாம்புகளை வைத்திருக்கும் நபர்.
  • இன்றைய வைரல் வீடியோ.
என்னடா நடக்குது இங்க.. கொத்து கொத்தாக பாம்புகளை வைத்து மானமேடையில் இப்படியா: வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக த்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், மக்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இதனாலே பாம்புகள் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வத்தை காட்டுகிறோம். இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வருகின்றது, ஆனால் இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

மேலும் படிக்க | துடிதுடிக்கும் கன்றுக்குட்டி... கபளீகரம் செய்யும் கொமோடோ டிராகன்... மனம் பதற வைக்கும் வீடியோ

பையில் கொத்து கொத்தாக பாம்புகள்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியைப் பார்த்ததும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் இத்தனை பாம்புகளின் தேவை என்ன என்று நீங்கள் நினைப்பீர்கள்.. வைரலான வீடியோவில், நபர் ஒருவர் மேடையில் வந்து பையில் இருந்து பாம்புகளை எடுக்கத் தொடங்குவதைக் காணலாம். இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த நபர் இத்தனை பாம்புகளை வைத்திருப்பது தான். அந்த நபரின் பையில் பாம்புகள் மட்டுமே உள்ளது. அந்த நபரின் கையில் பல பாம்புகள் இருப்பதை வீடியோவில் தெளிவாகக் காணலாம். இந்த வீடியோ எங்கிருந்து வந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை, ஆனால் இது ஒரு திருமண நிகழ்வில் எடுக்கபட்ட வீடியோவாக இருக்கலாம் என்று வீடியோ மூலம் தெரிகிறது.

கொத்து கொத்தாக பாம்புகளை வைத்திருக்கும் நபரின் வீடியோவை இங்கே காணுங்கள்:

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பல லட்சம் பேர் கண்டுள்ளனர். இதற்கு நெட்டிசன்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த வீடியோ எப்போது, ​​எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | குழந்தையிடம் போனை பிடுங்கி பிடுங்கி விளையாடும் குரங்கு: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள். முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: https://bit.ly/3AIMb22 Apple Link: https://apple.co/3yEataJ

Trending News