வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருட்டு சம்பவங்கள் உலகம் முழுவதும் பொதுவானவை. பல சம்பவங்களில், திருடர்கள் மிக சாமர்த்தியமாக தங்கள் வேலையை செய்து விடுகிறார்கள். அவர்கள் செய்த திருட்டை யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. திருட்டு சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இந்த சம்பவங்களில் திருடர்களின் சாமர்த்தியத்தை நாம் காண்கிறோம். 


தற்போது ஒரு திருடன் கரும்புகளை புத்திசாலித்தனமாக திருடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்த காணொளியை பார்த்த அனைவரும் திகைத்து போகின்றனர். 


மேலும் படிக்க | வா மோதி பாத்தரலாம்..! பாம்பை ஓட விட்ட கீரி! 


கரும்பு திருடனின் வீடியோ


பணம், நகை திருட்டு தொடர்பான பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், ஒரு திருடன் கரும்பை திருடுவதை பார்த்திருக்க மாட்டோம். வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், கரும்பு வயலில் திருடன் மெதுவாக நுழைவதை காண முடிகின்றது. அந்த நபருக்கு முன்னால் ஒரு பெரிய கரும்பு உள்ளது. அதைப் பார்த்ததும் அந்த திருடன் கரும்பை நடுவில் வெட்டி, ஒரு பெரிய துண்டை எடுத்துக்கொள்கிறார். மீதமுள்ள பகுதிகளை ஒரு ஊசியின் உதவியுடன் இணைக்கிறார். இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காண்பதற்கும் மிக வேடிக்கையாக உள்ளது.


கரும்பு திருடனின் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



இப்படி ஒரு திருட்டை பார்த்திருக்க முடியாது


கரும்பு திருட்டு குறித்த இந்த வீடியோ, naturallovers_ok என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் அதிர்ச்சியடைந்து எமோஜி மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்கள் மற்றும் ஆயிரக்கணக்கான லைக்குகளைப் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | உடலை வில்லாக வளைத்து பம்பரமாக சுழலும் பெண் – வைரல் வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR