வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பகிரப்படும் பல வீடியோக்கள் நம்மை சில சமயம் வாய் விட்டு சிரிக்க வைக்கின்றன. சில சமயம் மவுனமாக புன்னகைக்க வைக்கின்றன. அதுவும் குழந்தைகளின் வீடியோக்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவும் மிக அழகாக, கியூட்டாக உள்ளது. இணையவாசிகளின் இதயத்தை கவர்ந்துள்ளது இந்த வீடியோ. 


தற்போது வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், ஒரு சிறுமி ஒரு சிறுவனை முத்தமிடுவதும், அதன் பின் அந்த சிறுவன் அளிக்கும் கியூட் ரியாக்‌ஷனையும் காண முடிகின்றது. 


முத்தம் வாங்கி மயங்கிப்போன சிறுவனின் வீடியோவை இங்கே காணலாம்:



மேலும் படிக்க | ராட்சத அனகோண்டா பாம்பை கையில் பிடித்த மீனவர்; திகைக்க வைக்கும் வீடியோ


வீடியோவின் துவக்கத்தில், ஒரு சிறுவனும், சிறுமியும் ஒருவர் முன் ஒருவர் நின்றுகொண்டு பார்த்துக்கொண்டிருப்பதை காண முடிகின்றது. பின்னர் அந்த சிறுமி மிக அழகாக அந்த சிறுவனுக்கு முத்தம் கொடுக்கிறார். இதை எதிர்பாராத சிறுவன் மிகுந்த உற்சாகமாகிறார். மகிழ்ச்சியில் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த நொடி அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளித்தது என்பதை புரிந்துகொள்ள அவரது ரியாக்‌ஷனே போதுமானதாக இருந்தது. ஒருவர் மன அழுத்தத்தில் இருந்தால், மனம் தளர்வாகி உற்சாகம் பெற இந்த வீடியோ கண்டிப்பாக உதவும். 


இந்த வீடியோ மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் @buitengebieden என்ற பயனரால் பகிரப்பட்டது. இந்த வீடியோவுக்கு சுமார் 300,000 வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. 


இரு குழந்தைகளுக்கு இடையில் நடக்கும் இந்த பாச பரிமாற்றம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது. இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. ‘கியூட்’, ‘மிக அழகு’ என பயனர்கள் இந்த வீடியோவை புகழந்து வருகிறார்கள். "ட்விட்டரில் உள்ள சிறந்த வீடியோக்களில் இதுவும் ஒன்று" என்று ஒருவர் எழுதியுள்ளார். ‘எவ்வளவு அழகான குழந்தைகள்... என் இதயம் இளகியது’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். பல நெட்டிசன்கள் இதயம் மற்றும் ஸ்மைலி எமோஜிகளை இந்த வீடியோவுக்கு அளித்துள்ளனர். 


மேலும் படிக்க | ஒரே வீட்டில் வளரும் அணில் மற்றும் ஆமை! வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ