வித்தியாசமான திருமணம்:  சமூக ஊடகங்கள் இணையத்தில் ஒரு தளமாகும், அங்கு தினசரி பல வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. இங்கு இதைத் தான் பார்க்கப் போகிறோம் என்று யாரும் கனவில் கூட பார்க்க முடியாத நிகழ்ச்சிகளை எல்லாம், அசால்டாக நமது கைக்குள் இருக்கும் கைபேசி கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. அவற்றில் சில காட்சிகள் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன என்றால், சில அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் இதே போன்ற ஒரு வீடியோ வெளிவந்துள்ளது, 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயதான முதியவருக்கு திருமணம் நடப்பது ஒன்றும் அதிசயமில்லை. ஏன், நமது தமிழ்நாட்டில், திருக்கடையூர் உட்பட கோவில்களில், அறுபதாம் கல்யாணம், கனகாபிஷேகம் என வயது முதிர்ந்த தம்பதியினர், சாஸ்திரப்படி திருமணம் செய்துக் கொள்வதைப் பார்த்திருக்கலாம். ஆனால், 70 வயது முதியவர் 30 வயது மணமகளை திருமணம் செய்துக் கொண்டால், எப்படி இருக்கும்? அதிலும் மாப்பிள்ளையின் சிரிப்பு மத்தாப்பாய் இருக்க, மணமகளின் சிரிப்பு புஸ்வாணமாய் இருபப்து கவலையை ஏற்படுத்துகிறது.


வித்தியாசமான இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 70 வயதில் திருமணம் செய்துகொண்டாலும் தாத்தா, எப்படி உற்சாகமாக இருக்கிறார் என்பதை இதில் பார்க்கலாம். வயதான முதியவரின் திருமணம் தொடர்பான இந்த வீடியோவில், மணப்பெண்ணை பார்த்த மகிழ்ச்சியில் அவர் முகம் பிரகாசிப்பதைப் பார்க்கலாம்.


மேலும் படிக்க | நம்புங்க! இது அரச குடும்பத்தினரின் திருமணம் இல்லை... திருமண வீடியோ வைரல்


மகிழ்ச்சியை அடக்க முடியாமல் சிரிப்பை அடக்க முடியாமல் வினோதமான செயல்களைச் செய்கிறார் இந்த தாத்தா... இந்த திருமண வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்: 



வைரலாகி வரும் இந்த வீடியோவில், முதியவரும், மணப்பெண்ணும் இருப்பதைக் காணலாம். இந்த ஜோடியைப் பார்க்கும்போது, ​​மணமகனின் வயது சுமார் 70 இருக்கும் என்று தோன்றுவதற்கு காரணம், அவரது தோற்றமும், பொக்கை வாயும் என்றால், பெண்ணைப் பார்த்தாலே அவருடைய வயதில் பாதி தான் இருக்கும் என்பது தெரிகிறது.


இருவருக்கும் இடையில் தோற்றம், வயது உட்பட எந்தப் பொருத்தமும் இல்லை ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. திருமணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் மணமகனின் முகத்தில் இருக்கும் பூரிப்பும் சிரிப்பும் அவரது மனதை வெளிப்படுத்துகிறது.


மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ


திருமண விழா 


மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் அவர் தவித்தாலும், மணமகள் அமைதியாக நிற்பதைக் காணலாம். ஆனால் கேமரா ஃபோகஸ் ஆனதும், புது மணப்பெண்ணும் லேசாகச் சிரிக்கிறார். இந்த காணொளி, மணமக்களின் வெவ்வேறுவிதமான உணர்வுகளை காட்டுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.


ஜோடியை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி 
இதில் மணப்பெண்ணுடன் படகில் செல்லும் வயது முதிர்ந்த மணமகன் மற்றும் அவரை சுற்றியிருப்பவர்களின் கொண்டாட்டம் மனதை ஏதோ செய்கிறது. கல்யாணத்துக்கு வந்த விருந்தாளிகள், மாப்பிள்ளையுடன்  செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.


அனைவரும் சிரித்து மகிழ்சும் இந்த திருமண வீடியோ, funny_sandip என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுபற்றி ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார், 'இவர்கள் இருவருக்கும் பொருத்தம் இல்லை, பிறகு எப்படி திருமணம் செய்துக் கொண்டார்கள்?' என்று ஒருவர் கேள்வி கேட்கிறார்.


'அங்கிள் தனது மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் திண்டாடுகிறார், அவருக்கு இது ஒரு ஜாக்பாட் கல்யாணம்' என்று ஒரு பயனர் கூறுகிறார்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ஓடும் ரயிலில் ஓயாமல் ஆடிய பெண்.. வெச்சி செஞ்ச நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ