நீர் அருவியை பார்த்திருக்கலாம்... நெருப்பருவியை பார்த்ததுண்டா? நெருப்பு நீர்வீழ்ச்சி

Trending Firefall Viedeo: இயற்கையின் அதிசயங்கள் பார்க்க பார்க்க மலைப்பைத் தருகின்றன. மலையில் இருந்து நெருப்பாய் கொட்டும் நெருப்பருவி வீடியோ வைரல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 24, 2023, 06:56 AM IST
  • இயற்கையின் அதிசயங்கள்
  • மலையில் இருந்து நெருப்பாய் கொட்டும் அருவி
  • நெருப்பருவி வீடியோ வைரல்
நீர் அருவியை பார்த்திருக்கலாம்... நெருப்பருவியை பார்த்ததுண்டா? நெருப்பு நீர்வீழ்ச்சி title=

இயற்கை எப்போதும் மிகவும் அழகானது. அதன் அருட்கொடையில், பஞ்சபூதங்களும் விதவிதமாய் காட்சியளிக்கும். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பிரபஞ்சத்தின் ஐந்து முக்கிய காரணிகளும் எப்போதுமே நமக்கு ஆச்சரியத்தையும் மலைப்பையும் தருபவை. நீர் ஓரிடத்தில் நிற்காமல் பாய்ந்து கொண்டே இருக்கும் தன்மை கொண்டது. நதியாக, கடலாக, மழையாக, குளம் குட்டையாக, அருவியாக, பனிக்கட்டியாக, ஏன் மழை மேகமாக நீர் பல்வேறு விதங்களில் நம்மை சுற்றி இருக்கிறது.

நீரின் பல்வேறு நிலைகளை பார்த்து ரசித்திருக்கலாம். ஆனால் அதை அருவியாக பார்த்தால் எப்படி இருக்கும்? பரவசமாக இருக்கும். ஆனால் அது எந்த நிறத்தின் இருக்கும்? நீரின் நிறம் நெருப்பு சிவப்பு என்று சொன்னால் யாராவது ஒத்துக் கொள்வார்களா? ஆனால், இயற்கை தனது அதிசயங்களை இடத்திற்கு இடம் மாற்றிக் கொண்டு, ஓரிடத்தில் சிவப்பு ஆறாக ஓடுகிறது மற்றுமொரு இடத்தில் கழிவு நீராக ஓடுகிறது.

கழிவு நீர் என்பது இயற்கையானது அல்ல, இயற்கையை பயன்படுத்தும் மனிதர்கள் செய்யும் மோசமான பயன்பாட்டை எதிரொலிப்பதாக கழிவு நீர் உள்ளது.

ஆனால், உலகம் முழுவதுமே பேரழகைக் கொண்டிருக்கும் நீர் வீழ்ச்சிகள் அனைவரையும் கவர்கின்றன. அப்படி வித்தியாமான பேரழகைக் கொண்டிருக்கும் நீர் வீழ்ச்சியின் வீடியோ இணையத்தில் வைரலாகிற்து.

மேலும் படிக்க | மாத்தி யோசி! அதுக்குன்னு இப்படியா? ஓட்டுநரை கலாய்க்கும் வீடியோ வைரல்

அந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் தோன்றும் ஒரே எண்ணம், நீரா? இல்லை நெருப்பா? என்பது தான். நெருப்பாறாக மலை முகட்டில் இருந்து கொட்டும் அருவி ஆச்சரியத்தை தருகிறது.

நெருப்பு ஆறு வைரல் வீடியோ

குதிரைவால் அருவி அல்லது குதிரைவால் நீர்வீழ்ச்சி (Horsetail Fall)  என்பது கலிபோர்னியாவில் உள்ள இயோசோமிட்டி தேசிய பூங்காவில் அமைந்துள்ள அருவி ஆகும். காலநிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் வசந்த காலத்தில் இந்த குதிரைவால் அருவி பாயும்போது, நெருப்பு அருவியாக மாறுகிறது.

சூரிய ஒளியின் செம்மையான சிவப்பு நிறங்கள் எதிரொலிப்பதால் நீர் ஒளிரும். இந்த இயற்கையான நிகழ்வு நிகழும் இந்த அருவியை "நெருப்பு அருவி" என்றும் அழைக்கின்றனர்.

மேலும் படிக்க | டான்ஸ் அழகா இல்லை மேக்கப் அழகா? இவ்வளவு நேர்த்தியா நடனம் ஆட முடியுமா? வீடியோ வைரல்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் தேசிய பூங்காவில் மலையிலிருந்து நெருப்பு அருவியாகக் கொட்டும் வீடியோ ஒன்று அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகும், அது எப்போது வெளியானாலும் வைரலாகும்.

தற்போதும் @AMAZlNGNATURE என்ற வலைதளத்தில் வெளியாகி வைரலாகும் இந்த வீடியோவில் ஃபான்டசி திரைப்படங்களில் வரும் காட்சி போல, நெருப்பு கொட்டும் அருவி வீடியோ வைரல் ஆகிறது. இந்த வீடியோ பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, 4 மில்லியன் பார்வைகளை தற்போது பெற்றுள்ளது.

இது ஒவ்வொரு ஆண்டும் அந்த பகுதியில் நடக்கும் ஒரு இயற்கையான நிகழ்வு தான் என்றாலும், இயற்கையின் இந்த பேரழகு, அனைவரையும் அசத்துகிறது.

மேலும் படிக்க | வயிற்றை கலக்கும் வீடியோ! இங்க வாக்கிங் போனா ஒரே நாள்ல 10 கிலோ எடை குறைக்கலாம்

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News