இன்றைய வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு செய்திகளும், பல்வேறு விதங்களில் வித்தியாசமானவை. அறிவுக்கு தீனி போடும் செய்திகள் மட்டுமல்ல, வேண்டாத வீடீயோக்கள், பிரச்சனை தரும் வீடியோக்கள் என பல்வேறுவிதமான வீடியோக்களும் சமூக ஊடகங்களில் உலா வந்தாலும், அவற்றில் மனதை லேசாக்கும் வீடியோக்கள் தொடர்ந்து பார்க்கப்பட்டு வைரல் ஆகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் வைரலாகி அனைவரையும் கவரும் வீடியோக்களில் பெரும்பாலும் மனதிற்கு இதமளிக்கும் வீடியோக்களாக இருக்கின்றன. இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள் மனதை நெகிழ்விக்கின்றன. அவற்றில், சிலவற்றில் உபயோகமான தகவல்கள் இருக்கின்றன. 


சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பலருக்கு பயனுள்ளதாக இருந்தாலும், சிலருக்கு சங்கடங்களை தருவதை மறுக்க முடியாது. இணையம் என்பது இருபுறம் கூர் கொண்ட கத்தி என்பதை மனதில் வைத்துக் கொண்டால் போதுமானது.


மேலும் படிக்க | சிறு வயதை நினைப்படுத்தும் யானைக்குட்டிகளின் சண்டை வீடியோ! மனம் மயக்கும் வைரல் வீடியோ


பயனுள்ள பல தகவல்களுடன் மனதை லேசாக்கும் வீடியோக்களும் நம்மை மகிழ்விக்கின்றன. மகிழ்ச்சி ஒருபுறம் என்றால், மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள, இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் உதவுகின்றன.


இயற்கையின் படைப்பில், அனைவரையும் அதிசயப்பட வைப்பது விலங்குகள். மனிதர்களாகிய நமக்கு, விலங்குகள் பற்றி பெரிய அளவில் புரிதல் இல்லை. வீட்டில் வளர்க்கும் விலங்குகள் பற்றியே பெரிய அளவில் தெரியாத நமக்கு, காட்டு விலங்குகள் தொடர்பான விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள சமூக ஊடகம் உதவியாக இருக்கிறது.  


வித்தியாசமான சம்பவஙக்ளை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பவர்கள், தாங்கள் அனுபவித்த பரவசத்தை பிறரும் அனுபவிக்கட்டும் என அவற்றை பகிர்கின்றனர். அந்த வீடியோக்களில் சில அனைவருக்கும் பிடித்தமானதாக மாறிவிடுகிறது. இப்படி பலரும் பகிர்வதால், பல வீடியோக்கள், இணையத்தில் வைரலாகின்றன. 


மேலும் படிக்க | மனதை மயக்கும் இயற்கையின் வண்ணங்கள்! பார்க்க பார்க்க வியப்பூட்டும் நீரூற்று! 


சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆகி, சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் அழகிய வீடியோக்கள்  வியப்பை ஏற்படுத்துகின்றன. அப்படி ஒரு வீடியோவில் நமக்கு பொறுமைக்கான பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது நாய்க்குட்டி வீடியோ ஒன்று. 


ஆச்சரியமளிக்கும் துள்ளல் வீடியோவை பார்த்து மகிழுங்கள்.



இந்த வீடியோவைப் பார்த்தால், அடுத்து என்ன நடக்கிறது என்பதே மறந்து போய்விடுகிறது. நொடியில் மரணம் என்ற நிலையிலும், பொறுமையாக காத்திருந்த நாய்க்குட்டி, உயிருடன் நடந்து போவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.


பார்த்தாலே பரவசம் தரும் வீடியோவைப் பார்த்தால், எந்த நொடியிலும் இயல்பாக இருக்க கற்றுக் கொடுக்கும் நாய்க்குட்டியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


அமைதியான குணத்தால் பாராட்டு பெறும் நாய்க்குட்டி


நாய்க்குட்டியின் பொறுமையை பாராட்டி வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்தால், அடுத்த நொடி சாஸ்வதம் இல்லை என்ற நிலையிலும், எந்த பதற்றமும் காட்டாமல் அமைதியாக இருந்தால் எதுவும் சாத்தியமே என தோன்றுகிறது. அப்பனுக்கு பாடம் கற்றுக் கொடுத்த சுப்பன் என்று பாராட்டுவதைப் போல, நாய்க்குட்டி ஆசிரியராக மாறியத் தருணமும், இந்த வீடியோவும் பல நாட்கள் நம் மனதில் இருந்து மாறாது என்று சொல்லலாம்.


இந்த வீடியோவை பலமுறை பார்த்தாலும், இன்னும் ஒரு முறை பார்க்க மாட்டோமா என்ற ஏக்கமே, இந்த நாய்க்குட்டியின் ‘பொறுமையின் சிகரம்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் மனதையும் மயக்கி வருகிறது.


மேலும் படிக்க | மனிதர்களை ரொம்ப நம்புறீங்கப்பா! மான்களை கலாய்க்கும் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ