வைரல் வீடியோ: இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. தூங்கி எழுவது முதல் தூங்க செல்லும் வரை அதிக்கபடியான நேரத்தை நாம் சமூக ஊடகங்களில் தான் செலவிடுகிறோம். ஏனென்றால் இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. நமக்கு தேவையான பலவித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு ஆச்சரியம், அதிசயம், அதிர்ச்சி, மனிதநேயம் போன்றவற்றை வழங்குகின்றன. அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் சில வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. அப்படி ஒரு வீடியோப் பற்றி தான் இந்த வீடியோவில் நாம் பார்க்க உள்ளோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலம் கொப்பல் தாலுக்காவின் ஜப்பலகுடா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது திடீரென வந்த குரங்கு, உணவு உண்ணும் மாணவர்களை தொந்தரவு செய்தது. இதனைக் கண்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இப்ராகிம் சாப் ஒரு தட்டில் உணவை எடுத்துக்கொண்டு தரையில் அந்த குரங்கின் அருகில் அமர்ந்து, குரங்குக்கு உணவு கொடுக்க முயற்சித்தார்.


மேலும் படிக்க: நாயை தாக்கிய நபர், பழி வாங்கிய பசு: பதற வைக்கும் வைரல் வீடியோ


முதலில் தயங்கிய குரங்கு சிறிது நேரத்தில் உணவை சாப்பிட ஆரம்பித்தது. மாணவர்களுக்குக்கிடையே அமர்ந்து தலைமை ஆசிரியர் குழந்தைக்கு ஊட்டுவதை போல உணவை ஊட்ட குழந்தையை போல் குரங்கும் அந்த உணவை சாப்பிட்டது. இதை அங்கிருந்த மாணவர்களும் ஆச்சிரியத்துடன் பார்த்தனர். இந்நிகழ்வை வீடியோ எடுத்தவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது. மேலும் தலைமை ஆசிரியர் இப்ராகிம்சாபின் இந்த செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: என்ன தைரியம் இருந்தா ‘இப்படி’ ஒரு வீடியோவை போடுவீங்க? கடுப்பாகும் நெட்டிசன்கள்


மனதுக்கு இதமளிக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:


சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகளின் இதயம் மகிழ்ந்துள்ளது. உலகம் எவ்வளவு மாறினாலும், மாறும் இந்த உலகில் மாறாமல் இருப்பது மனிதநேயம் மட்டுமே. மனிதநேயம் படர்ந்து வளரட்டும். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ