தாகம் தணித்த மாற்றுத் திறனாளிக்கு ’தேங்க் யூ’ சொன்ன குரங்கு: வைரல் வீடியோ

தாகத்தில் இருந்தபோது தண்ணி கொடுத்து உதவிய மாற்றுத் திறனாளிக்கு குரங்கு மைண்ட் வாய்ஸில் தேங்க் யூ சொன்ன வீடியோ இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 19, 2022, 11:31 AM IST
  • இணையத்தை கலக்கும் குரங்கு வீடியோ
  • குரங்குக்கு தாகம் தணிக்கும் மாற்றுத்திறனாளி
  • மாற்றுத் திறனாளிக்கு குவியும் பாராட்டு
தாகம் தணித்த மாற்றுத் திறனாளிக்கு ’தேங்க் யூ’ சொன்ன குரங்கு: வைரல் வீடியோ  title=

ஆபத்தான நேரத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவும் மனசு தான் கடவுள் என பலரும் சொல்லிக் கேட்டிருக்கும். ஆனால், உணர்வுப்பூர்மாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், சரியான நேரத்தில் கிடைத்த உதவியின் மகிமையும் மகத்துவமும். இந்த உதவியை மனிதர்கள் விலங்குக்கும், விலங்குகள் மனிதர்களும் செய்யும் அபூர்வத்தை எல்லோருமே இக்கட்டான சந்தர்பங்களில் பார்த்து நெகிழ்ந்த நொடிகளுக்கான உதாரணங்கள் இங்கே பல உண்டு. அப்படியான மீண்டும் ஒரு நெகிழ்வுப்பூர்வமான வைரல் வீடியோ தான் இப்போது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மாற்றுத் திறனாளிகளையே மரக்கட்டைக்கு சமமாக பார்க்கும் மனித சமூகத்தில் அவர்கள் செய்யும் ஒரு சில சம்பவங்கள், மனித சமூகத்தில் மறந்துபோய் கொண்டிருக்கும் மனிதாபிமானத்தை நினைவூட்டிவிடுகின்றன.

மேலும் படிக்க | தாலி கட்டின பிறகு ஜாலியா இருக்கலாம்! 2 நிமிசம்

@Gulzar_sahab என்ற டிவிட்டர் யூசர் அந்த நெகிழ்ச்சியான வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில், தாகத்துடன் திரியும் குரங்கு ஒன்றுக்கு தான் வைத்திருக்கும் கோப்பையில் மாற்றுத் திறனாளி தண்ணீர் கொடுத்து உதவுகிறார். இதனை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை என்றாலும், மாற்றுத் திறனாளியின் மனிதாபிமான செயல் வீடியோ காண்பவர்களை நெகிழ செய்துள்ளது. குரங்கு தண்ணீருக்கு தான் அலைகிறது என்பதை உணர்ந்து, அதற்கு தாகம் தணித்த அந்த மாற்றுத் திறனாளிக்கு இணையவாசிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

குரங்கிடம் அவர் என்ன எதிர்பார்த்துவிடுவார்? அன்பைத் தவிர.... அன்பு தான் எல்லாமே சார் என நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். இன்னும் சிலர், அவரின் இந்த செயல் நெகிழ வைப்பதாகவும், அவரின் செயல் மனிதாபிமானத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. இதேபோல், இன்னொரு சாலையோர வாசி நாய்க்கு பால் ஊற்றி பசியை தணிக்கும் வீடியோவும் வைரலாகியிருக்கிறது.

மேலும் படிக்க | த்ரில் வேட்டை.. பதுங்கி பதுங்கி மானின் மீது பாய்ந்த சிறுத்தை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News