தாலி கட்டின பிறகு ஜாலியா இருக்கலாம்! 2 நிமிசம் பொருத்துக்கோ! வைரலாகும் மணமகன் வீடியோ

Bride Groom Video: 10 நிமிசம் பொருத்தக்க முடியாதா? அப்படி என்ன அவசரம்? அவசரக் குடுக்கை என அனைவரிடம் திட்டு வாங்கும் மாப்பிள்ளை! வைரலாகும் திருமண வீடியோ....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 18, 2022, 02:38 PM IST
  • 10 நிமிசம் பொருத்தக்க முடியாதா? அப்படி என்ன அவசரம்?
  • அவசரக் குடுக்கை மாப்பிள்ளை வீடியோ வைரல்
  • தாலி கட்டின பிறகு ஜாலியா இருக்கலாம்! 2 நிமிசம் பொறுத்துக்கோ மாப்பிள்ளை
தாலி கட்டின பிறகு ஜாலியா இருக்கலாம்! 2 நிமிசம் பொருத்துக்கோ! வைரலாகும் மணமகன் வீடியோ title=

வைரலாகும் திருமண வீடியோ: மணமகளுடன் திருமண மண்டபத்தை விட்டு ஓடும் மணமகன் வீடியோ வைரலாகிறது. அப்படி என்ன அவசரம் என அனைவரும் நக்கலும் நையாண்டியுமாக கமெண்ட் போட்டு, பகிரும்  இந்த வீடியோ இணையத்தைக் கலக்குகிறது. வைதீக முறைப்படி திருமணம் நடைபெறும்போது, மாப்பிள்ளை மணப்பந்தலில் இருந்து எழுந்து, மணமகளையும் இழுத்துக் கொண்டும் வீடியோ அதிர்ச்சியளிக்கிறது.

வைரலாகும் இந்த திருமண வீடியோவில், மணமகன், மணமேடையில் அமர்ந்திருக்கும் மணமகளை வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடுகிறார். ஆனால், மணமேடையில் அமர்ந்திருக்கும் அய்யர், மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்கிறார். 

இணைய உலகில், சமூக ஊடகங்கள் அனைவரும் பதிவு செய்யும் வீடியோக்களால் பலரையும் மகிழ்விக்கிறது. வித்தியாசமான கலக்கல் வீடியோக்களால் அதிரும் இணையதளம், சில நேரங்களில் சங்கடத்தையும் கொடுக்கிறது. மண்டபத்தில் அமர்ந்திருந்த மணமகன் மணப்பெண்ணுடன் ஓடிப்போன வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | மணமேடையில் லிப் லாக் கொடுத்த மணப்பெண்! வேதனையில் 90's கிட்ஸ்!

ஆனால், மணமகன் திருமண மண்டபத்தை விட்டு ஓடவில்லை, ஆனால் தாலிக் கட்டுவதற்கு முன் பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடுவது சரியா தப்பா என்று அனைவரும் பட்டிமன்றமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

மணமகனும், மணமகளும் மண்டபத்தை விட்டு ஓடும் இந்த வேடிக்கையான வீடியோ, சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் பார்க்கப்பட்டு வைரலாகிறது. சில நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில், மணமக்கள் பந்தலில் அமர்ந்திருப்பதைக் காணலாம். பண்டிதர் அருகில் அமர்ந்து மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FunTaap Official (@funtaap)

ஆனால் அப்போது பின்னணியில் இசை ஒலிக்கும் சத்தம் கேட்டது. இதைக் கேட்டதும் மாப்பிள்ளையால் தன்னை அடக்கிக் கொள்ள முடியவில்லை. மேடையில் எழுந்து ஆடத் தொடங்கிவிட்டார். ஆனால், அப்போது மணப்பெண் கையைப் பிடித்து அமர வைத்தார்.

மேலும் படிக்க | Viral News: 2 வயது சிறுவனை விழுங்கிய பின் வெளியில் துப்பிய நீர் யானை!

ஆனால் சில நொடிகளில் மணமகன் மீண்டும் எழுந்தான். மணப்பெண்ணை மண்டபத்தில் இருந்து இழுத்துக்கொண்டு ஓடியது பார்ப்பதற்கே வேடிக்கையாக இருக்கிறது. மணமேடையில் மணமக்கள் இல்லாமல் பண்டிதர் மட்டும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மணமக்களோ உற்சாகத்துடன் நடனமாடுவதை வீடியோவில் காணலாம். பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைக்கும் இந்த வீடியோ, பெரியவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்க்லாம். இன்ஸ்டாகிராமில் ஃபன்டாப் என்ற பக்கத்திலும் இந்த வேடிக்கையான வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு சமூக வலைதள பயனாளர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | கலிகாலம் முத்தி போச்சு! திருமணத்தில் காதலனை இறுக்க அணைச்சு உம்மா கொடுத்த மணப்பெண்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News