ஹாங்காங் போராட்டத்தின் போது போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற போராட்டத்தின்போது சீனா சார்பு ஹாங்காங் காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்
ஹாங்காங்: கடந்த செப்டம்பரில் நடந்த போராட்டத்தின்போது ஹாங்காங் காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சீனா சார்பு ஹாங்காங் காவல்துறை எதிர்ப்பாளர்களை மிகவும் மோசமாக நடத்தியது. "Student K" என்று அழைக்கப்படும் 17 வயது மாணவி, கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி போலீஸ் அதிகாரியை தாக்கினார் என்ற சந்தேகத்தின் கீழ் ஷா டின் எம்.டி.ஆர் நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்று Hong Kong Free Press கூறுகிறது.
ஒரு பெண் அதிகாரி தனது மார்பகங்களை பல முறை கசக்கி துன்புறுத்தியதோடு, அவதூறான மொழியைப் பயன்படுத்தியதாகவும் அந்த மாணவி கூறினார்.
கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கைகளை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறை அதிகாரிகள் மறுத்ததாகவும் சிறுமி குற்றம் சாட்டினார்.
"மனித உரிமைகள் என்பது சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டவை, நீங்கள் ஒரு கைது செய்யப்பட்ட நபர், எனவே உங்களுக்கு அந்த சுதந்திரம் கிடையாது" என்று காவல்துறை அதிகாரி கூறியதாக அந்த மாணவி கூறுகிறார். ஒரு பெண் அதிகாரி தனது தலையை மாணவியின் மார்புக்கு அருகில் வைத்திருந்த்தாகவும் கூறப்படுகிறது.
"சமூக சேவையாளர்களான நாங்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வழக்குகளில் கூட இந்த அளவிலான சிக்கல்களை சந்திக்கவில்லை. காவல்துறை ஏன் சிறார்களையும், சிறுமிகளையும் இவ்வாறு துன்புறுத்துகிறது?” என்று General Union council member ஜாக்கி சென் கேள்வி எழுப்புகிறார்.
Also Read | பாலியல் துணையின் ஆயுள் குறைவுக்கு ஆண்கள் காரணமா?
ஆண்டு முழுவதும் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களின் போது, எதிர்ப்பாளர்களை மெளனமாக்குவதற்கு ஹாங்காங் காவல்துறையினர் தங்கள் சக்தியைப் பயன்படுத்துவதைக் காணலாம். ஜனவரி மாதம் அம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "ஹாங்காங்கின் தற்போதைய எதிர்ப்பு இயக்கம் தொடங்கியதிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் நடத்தப்படுவதாகவும், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டபோது பெண்களின் உள்ளாடைகளை போலிசார் அவிழ்த்த அவமானகரமான காட்சிகள் வெளிப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read | தீவிர புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை COVID-19 அபாயத்தை அதிகரிக்காது
இந்த பிரச்சினையைப் பற்றி பேசிய சில பெண்கள் பெரும் பின்னடைவை எதிர்கொண்டனர். சிலர் தங்கள் தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். சிலர் போலி செக்ஸ் வீடியோக்களால் குறிவைக்கப்பட்டுள்ளனர் துன்புறுத்தும் தொலைபேசி அழைப்புகளைப் பெற்றுள்ளனர். இந்த துஷ்பிரயோகத்தின் பெரும்பகுதி அநாமதேய இடங்களில் இருந்து வந்துள்ளன. எதிர்ப்பாளர்களைத் துன்புறுத்துவதன் மூலமும், போலீசாரின் முறைகேடு குறித்து சுயாதீன விசாரணையை நடத்தாமல் இத்தகைய துஷ்பிரயோகம் செழித்து வளரும் ஒரு சூழலை ஹாங்காங் அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.