விதிமுறைகளை மீறி பயணித்த Ronaldo, இத்தாலிக்கு அபராதம் கட்டுவாரா?
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo ) உலகின் நம்பர் ஒன் கால்பந்து வீரர். அவருக்கு இத்தாலி அரசு அபராதம் விதிக்குமா? ரொனால்டோ தவறை ஒப்புக் கொள்வாரா என்பது இன்று மிகப் பெரிய விவாதப் பொருளாகி இருக்கிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo ) உலகின் நம்பர் ஒன் கால்பந்து வீரர். அவருக்கு இத்தாலி அரசு அபராதம் விதிக்குமா? ரொனால்டோ தவறை ஒப்புக் கொள்வாரா என்பது இன்று மிகப் பெரிய விவாதப் பொருளாகி இருக்கிறது.
போர்ச்சுகல் அணியின் கேப்டனாக இருக்கிறார் ரொனால்டோ. அவர் யுவண்டஸ் (Juventus) அணிக்காக விளயாடுகிறார். ஒரு போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக தனது பிறந்தநாளன்று தோழி ஜார்ஜினா ரோட்ரிக்ஸுடன் இத்தாலியில் உள்ள பனிமலைக்கு உல்லாசப் பயணம் சென்றார்கள்.
ஆனால் கொரோனா தாக்கத்தினால், இத்தாலியில் தற்போது "ஆரஞ்சு மண்டலங்களுக்கு" (“orange zones”) இடையில் பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து செல்வதற்கு முறையான அனுமதி பெறவேண்டும், அதற்கான காரணங்கள் உகந்த்தாக இருக்கவேண்டும்.
அந்த பயணத்தை ரொனால்டோ சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அரசின் விதிகளை மீறுவது சரியா என்ற கேள்விதான் இப்போது எழுந்துள்ளது. இதற்காக ரொனால்டோவுக்கு அபராதம் விதிக்கப்படுமா? சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also Read | Pakistan கிரிக்கெட் வீரர் ஹசன் அலியை ட்ரோல் செய்யும் ICC
ஆனால் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு மலை ரிசார்ட்டுக்கு சென்ற விஷயத்தை பெரிய விஷயமாக்க வேண்டிய தேவையில்லை என்று சொல்கிறார் யுவண்டஸ் (Juventus) அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரியா பிர்லோ (Andrea Pirlo).
"ரொனால்டோவுக்கு விடுமுறை இருந்தது, அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் விரும்பியதைச் செய்ய முடியும், அதற்கான சுதந்திரம் அவருக்கு உண்டு" என்று பிர்லோ கூறுகிறார்.
ஆனால், ரொனோல்டோ பகிர்ந்து கொண்ட சமூக ஊடக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது. இந்த வார தொடக்கத்தில், இத்தாலியின் Valle d’Aosta பிராந்திய போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள பீட்மாண்ட் பிராந்தியத்தில் (Piedmont region) இருந்து வாலே டி ஆஸ்டா (Valle d’Aosta) என்ற பகுதிக்கு செவ்வாயன்று ரொனால்டோ தனது தோழியுடன் சென்றார். மறுநாள் Turin -க்குத் திரும்புவதற்கு முன்பு ஒரு ரிசார்ட் ஹோட்டலில் இருவரும் ஓர் இரவு தங்கினார்கள். இது கொரோனா தடுப்பு விதிகளை மீறிய குற்றம் என்பது நிரூபிக்கப்பட்டால், ரொனால்டோ மற்றும் ரோட்ரிக்ஸ் (Rodriguez) இருவரும் அபராதம் விதிக்க நேரிடும்.
கடந்த ஆண்டு அக்டோபரில் கொரோனா பரிசோதனையில் ரொனால்டோ-வுக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தற்போது குணமாகிவிட்டார் என்றாலும், பாதிக்கப்பட்ட ஒருவர், அதுவும் பிறருக்கு உதாரணமாக இருக்க வேண்டிய பிரபலம் விதிமுறைகளை மீறியது சரியா என்ற விவாதங்கள் சூடு பிடித்துள்ளன.
Also Read | Kieron Pollard நல்லாதான் இருக்காரு: Viral ஆன ‘Kieron Pollard Death’ செய்தி, வெறியான fans
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையானசெய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR