நாடு முழுவதும் கொரோனா தொற்று (COVID-19) அதிகரித்து வருவதால், பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை போடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக மாநில அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள 2021 திரையரங்குகளில் ஏப்ரல் 10 முதல் மால்களில் உள்ள தியேட்டர்கள் மற்றும் தனித்து இயங்கும் தியேட்டர்களில் 50 சதவீதம் இறக்கைகளில் மட்டுமே உட்கார அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் (Dhanush), லால், ரஜிஷா விஜயன், நட்டி நடராஜன், கெளரி கிஷன் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் (Karnan) திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. அசுரன் படத்திற்கு பிறகு தனுஷின் கர்ணன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.


 



 


இதுவரை இல்லாத அளவுக்கு தனுஷ் படத்திற்கு முதன் முறையாக வேற லெவலில் டிக்கெட் புக்கிங் நடைபெற்றதாக ஏகப்பட்ட தியேட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. தனுஷின் கர்ணன் திரைப்படத்தை திரையில் காண தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தை காட்டி வருகின்றனர். 


ALSO READ | மனதைக் கவரும் முதல் விமர்சனத்தை பெற்றது தனுஷின் 'கர்ணன்'


100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கி வந்த நிலையில், நாளை முதல் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிப்படும்.  இதனால், கர்ணன் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் நிலையும் உருவாகி உள்ளது.


மேலும் 50 சதவீத இருக்கை அனுமதி குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் கே சுப்பிரமணியன் கூறுகையில், அனைத்து கோவிட் -19 நெறிமுறைகளையும் பின்பற்றி தியேட்டர்களை செயல்படுத்தி வரும் தியேட்டர்கள் உரிமையாளர்கள் மத்தியில் தமிழக அரசின் அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டர்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் முகமூடிகளை வழங்கி வருவதாகவும், ஒவ்வொரு திரையிடலுக்கு பின்னர் திரையரங்குகளை சுத்தப்படுத்துவதாகவும் கூறினார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR