வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


ஒருவரது வயது அவர் விரும்புவதைச் செய்வதிலிருந்து அவரைத் தடுக்கக்கூடாது. அதை சரி என நிரூபிக்கும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.  64 வயதான கேரளாவைச் சேர்ந்த ஒரு நபர் தனது அற்புதமான கால்பந்து திறமையால் சமூக வலைத்தளங்களை கவர்ந்து வருகிறார். 


மேலும் படிக்க | படிக்க சொன்னா பல்லிய மேல விட்டுடுவேன்: குறும்புக்கார குழந்தையின் வைரல் வீடியோ


வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு டிரக் டிரைவரான ஜேம்ஸ், ஒரு கால்பந்து வித்தகரைப் போல கால்பந்து விளையாடுவதை காண முடிகின்றது. யூடியூபர் பிரதீப் தனது கால்பந்தாட்டத் திறமையைக் காட்டுவதுடன் வீடியோ தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து அவர் கால்பந்தை ஜேம்ஸிடம் கொடுக்கிறார்.


ஜேம்ஸ் ஒரு கைதேர்ந்த கால்பந்து வீரரை போல அதை எடுத்து, விளையாடி பல வித்தைகளையும் செய்கிறார். மேலும், அவர் தனது தலை மற்றும் தோள்களில் கால்பந்தை சமநிலைப்படுத்துகிறார். 


இந்த வீடியோவை பிரதீப் ரமேஷ் @prsoccerart என்ற தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். அதில் "அற்புதமாக கால்பந்து விளையாடும் இந்த 64 வயதானவரை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர் வாழ்க்கையை ஓட்ட ஒரு டிரக் ஓட்டுகிறார், மேலும் தனது கால்பந்து கிட்டையும் தனது லாரியில் எடுத்துச் செல்கிறார். அவர் வயநாடு கால்பந்து அணியின் ஒரு அங்கமாக இருந்தார். அந்த அணியில் இன்னும் இந்த விளையாட்டை விளையாடுபவர் இவர் மட்டுமே.


அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? கண்டிப்பாக அதை செய்யுங்கள் என்பதுதான்” என்று எழுதியுள்ளார். 


அசால்டாக கால்பந்து ஆடி கலக்கும் கேரள சேட்டனின் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ சமூக வலைதளவாசிகளை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது. ஒரு பயனர், “வயதான பெரும்பாலானவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வெட்கப்படுகிறார்கள், ஆனால் இவர் அப்படி இல்லை” என எழுதியுள்ளார். 


மற்றொருவர், “வயது என்பது வெறும் எண்தான்” என கமெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும், லைக்குகளும் வந்துகொண்டிருக்கின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | கும்மாங்குத்துவிட்ட குட்டிச் சிறுவனின் அலப்பறை வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR