கும்மாங்குத்துவிட்ட குட்டிச் சிறுவனின் அலப்பறை வீடியோ

அமைதியாக வீடியோ பார்த்திக் கொண்டிருக்கும் இளைஞரின் அருகில் செல்லும் குட்டிச் சிறுவன், திடீரென அவருடைய முகத்தில் கும்மாங் குத்துவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 17, 2022, 03:57 PM IST
  • குட்டி சிறுவனின் சேட்டை வீடியோ
  • கும்மாங்குத்து வாங்கிய நபர்
  • இணையத்தில் வைரலாகும் சிறுவன் சேட்டை
கும்மாங்குத்துவிட்ட குட்டிச் சிறுவனின் அலப்பறை வீடியோ title=

வம்பை விலைக்கு வாங்குவதற்கென்ற சிலர் இருப்பார்கள். பதின்பருவத்தில் தான் பெரும்பாலனோர் அலப்பறை செய்து வம்புடன் வீட்டுக்கு வருவார்கள். ஆனால், இப்போதெல்லாம் குழந்தைகளே வம்பை விலைக்கு வாங்கி, ரணகளத்துடன் தான் வீட்டுக்கு திரும்புகிறார்கள். சுட்டிக் குழந்தையாக இருந்துவிட்டால்போதும், தினம்தோறும் ஒரு பஞ்சாயத்தை தீர்க்கக்கூடிய பெற்றோராக தான் நீங்கள் இருப்பீர்கள். விளையாட செல்லும் இடத்தில் ஏதாவது ஒரு குறும்புத்தனத்தை செய்துவிட்டு வருவார்கள். 

மேலும் படிக்க | ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு ஆட்டம் போட்ட இலங்கை ஆட்டோக்காரர் - வைரல் வீடியோ

வம்பு செய்வதிலும் இரு வகையான குழந்தைகள் இருப்பார்கள். அதாவது, சண்டைசெய்துவிட்டு ஒன்றுமே செய்யாததுபோல் வீட்டு வருபவர்களும் இருப்பார்கள். தெனாவெட்டாக நான் தான் செய்தேன் என்ற அலப்பறையுடன் வருபவர்களும் இருப்பார்கள். இந்த மாதிரியான இடங்களில் பெற்றோரின் நிலை தான் கவலைக்குரியது. குழந்தையையும் அடிக்க முடியாமல், வம்பிழுத்தவர்களிடம் பேச்சும் வாங்கவேண்டி இருக்கும். அப்படியான சுட்டிக் சிறுவன் செய்த சேட்டை வீடியோ தான் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கும்பலாக இருக்கும் ஓர் இடத்தில் எல்லோரும் அமையாக அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அது ஏதோ ஒரு விழாவாக தான் இருக்க வேண்டும். அந்த விழாவில் கலந்து கொண்ட குட்டிச் சிறுவன், விறுவிறுவென நடந்து செல்கிறான். திடீரென ஒருவருக்கு  அருகில் செல்லும் அவன், அவரிடம் இருந்து போனை வாங்குகிறான். சிறுவனை கவனிக்காமல் அந்த நபரும் மொபைலில் மூழ்கி இருக்கிறார். இதனைப் பார்த்த சிறுவன் திடீரென அந்த நபரின் முகத்திலேயே கும்மாங்குத்துவிட்டு ஓடி வருகிறான். இந்த வீடியோவை பார்க்கும் பலருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. நீங்கள் சிரிக்கவில்லை என்றால் தான் அதிசயம். 

மேலும் படிக்க | படிக்க சொன்னா பல்லிய மேல விட்டுடுவேன்: குறும்புக்கார குழந்தையின் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News