See Pic`s: இணையத்தை கலக்கும் லேடி சூப்பர் ஸ்டாரின் லேடஸ்ட் புகைப்படம்!
நயன்தாரா தற்போது ‘நெற்றிக்கண்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
நயன்தாரா தற்போது ‘நெற்றிக்கண்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா (Nayanthara) மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் (Vignesh Sivan) ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கினறனர். கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக காதலித்து வரும் இந்த ஜோடி அடிக்கடி வெளிநாடு சென்று விதவிதமான, நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "நானும் ரவுடிதான்". இந்த திரைப்படத்தில் பணியாற்றிய போது இருவரும் காதலிக்க தொடங்கினார்கள் என்றும், இவர்களது ஐந்து வருட காதல், இந்தவருடம் முடிவுக்கு வந்து இந்த ஆண்டு திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றனர். சமீபத்தில் கூட இந்த காதல் ஜோடி கோவாவுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | வெள்ளை நிற உடையில் தேவதை போல மின்னும் நயன்தாரா; வைரலாகும் wow புகைப்படம்!!
இந்நிலையில், நடிகை நயன்தாராவின் காதலர் ஆன இயக்குனர் விக்னேஷ் சிவன், தற்போது தயாரித்து உள்ள நெற்றிக்கண் படத்தின் Teaser ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறார். தற்போது நயன்தாரா திருமணம் குறித்த புதிய வதந்தி ஒன்று இணையதளங்களில் பரவி வருகிறது. ஆனால், அதற்கெல்லாம் கவலைப் படாமல் மலையாள படத்தின் சூட்டிங் சென்றுவிட்டார். அந்த படத்திற்காக எடுத்த சில ஸ்டில்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் “36 வயசுல கூட சிக்குணு தான் இருக்கா” என்று கமெண்ட் செய்து வருக்கின்றனர்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்..
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR