தெருநாய் என நினைத்து, சிங்கத்தை நெருங்கிய தம்பதி - பக்கத்தில் பார்த்ததும் என்ன செய்தார்கள் பாருங்கள்!!
Viral Video: இரவில் இருள் சூழ்ந்த தெரு ஒன்றில் நின்றுகொண்டிருந்த சிங்கத்தை பார்த்ததும், பதறி அடித்து ஓடிய தம்பதியரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Lion Viral Video Latest: பணி முடித்து இரவு 10, 11 மணியளவில் வீடு திரும்புவர்களுக்கு எப்போதும் மனதிற்குள் ஒரு அச்ச உணர்வு இருந்துகொண்டே இருக்கும். சில நேரம் பைக்கில் எதாவது தெருவுக்குள் நுழையும்போது அங்கிருக்கும் தெருநாய்கள் துரத்தும். இதை வாகன ஓட்டிகளை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கும். எந்த நாய் எங்கிருந்து பாய்ந்து, தனது காலை கடிக்கும் என்ற அச்சத்துடன்தான் பலரும் வீடு திரும்புவார்கள். அதேபோல், இரவில் இருள் சூழ்ந்த பகுதிகளில்தான் மொபைல் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களும் அதிகம் நடைபெறுகின்றன. அந்த வகையில், இருட்டில் பைக்கில் செல்வதாக இருந்தாலும் சரி, நடந்துசெல்வதாக இருந்தாலும் சரி எப்போதும் எச்சரிக்கை உடனும், விழிப்புணர்வுடனும் இருப்பது நல்லது.
பதறி அடித்து ஓடிய தம்பதி
கடந்த அக். 6ஆம் தேதி அன்று குஜராத்தின் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள நவாபந்தர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராம் கோவில் அருகே இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இதன் காட்சிகள் பதிவாகியிருக்கிறது. இந்த சிசிடிவி காட்சிகள்தான் தற்போது பல்வேறு சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. மக்களும் இந்த பரபரப்பான வீடியோவை பலருக்கும் பகிர்ந்து வர, தற்போது இது வைரலாகி உள்ளது.
தம்பதிகள் அந்த கிராமத்தின் வழியாக வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் தெருவில் ஒரு பெரிய உருவத்தை கண்டுள்ளனர். ஆரம்பத்தில் அதனை பெரிய தெரு நாய் என்றே அவர்கள் நினைத்திருக்கின்றனர். அருகே செல்ல செல்ல தான் அதன் உண்மையான உருவம் என்ன என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். பக்கத்தில் பார்த்ததும் பிடரியுடன் வழிமறித்து நிற்கும் ஆண் சிங்கத்தை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்து பயத்தில் உறைந்துவிட்டனர்.
தெறித்து ஓடிய தெருநாய்
சிங்கத்தை பார்த்தும் பைக்கின் பின்சீட்டில் அமர்ந்திருந்த பெண் உடனே இறங்கி குடுகுடுவென ஓடத்தொடங்கினார். அந்த ஆணும் பைக்கை அணைக்காமல், ஸ்டாண்டை போட்டு நிறுத்திவிட்டு அவரும் பின்பக்கமாக ஓடி தப்பிச் சென்றார். ஆனால், அந்த சிங்கம் அவர்களை துரத்தாமல் நிதானமாக அவர்கள் சென்ற பாதையில் நடந்துசென்றது. அந்த வீடியோவில் பார்க்கும்போது சிங்கம் ஆக்ரோஷமாக தென்படவில்லை.
சிங்கத்தை பார்த்ததும் அந்த தம்பதி ஓடியது போலவே, அங்கு நின்றுகொண்டிருந்த தெருநாய் ஒன்றும் தெறித்து ஓடியது. பைக்கின் லைட் எரிந்துகொண்டே இருந்ததால் இருட்டில் சிங்கம் அந்த பாதையில் நடந்து வருவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ X, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது. மேலும், குஜராத் மாநிலத்தில் 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 674 ஆசிய சிங்கங்கள் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | குழந்தை எதிரிலேயே முத்தம் கொடுத்த பெற்றோர்! அதோட ரியாக்ஷன பாருங்க…
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ