பொதுவாக பாம்புகள் மிகவும் ஆபத்தான விலங்காக கருதப்படுகின்றன. அதிலும் மலைப்பாம்பு பற்றி சொல்லவே தேவையில்லை . அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு மிகவும் வைரலாகி வருகின்றன. அதில் பெரும்பாலும், பாம்புகளிடம் சிக்கிக் கொண்டு தவிர்க்கும் உயிரினங்களின் வீடியோக்கள் தான் அதிகம். ஆனால், பாம்பு சின்னஞ்சிறு எறும்புகளிடம் மாட்டிக் கொண்டதை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், மலைப்பாம்பு ஒன்றை சின்னஞ்சிறு எறும்புகள் பதம் பார்த்த வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
இயற்கையிலிருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். அவற்றில் சில நமக்கு வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்துரைக்கின்றன. குறிப்பாக அளவில் சிறியது தானே என எண்ணக் கூடாது. அதனை எறும்புகள் மலைப்பாம்ப்பை கொன்ற இந்த வீடியோ உணர்த்தும். பார்ப்பதற்கு சிறியவை என்றாலும், எறும்புகள் அனைத்தும் இணைந்து தாக்கியதால், மலைபாம்பை வீழ்த்த முடிந்தது. அந்த வகையில், எறும்பின் வலிமையை உணர்த்தும் வீடியோ (Viral Video) ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வைரலாகும் காணொளியில், எறும்புக் கூட்டத்திற்குள் மலைப்பாம்பு ஒன்று நுழைகிறது. அடுத்த கணமே, எறும்புகள் அனைத்தும் மலைப்பாம்பை தாக்கி கொன்றன. சின்னஞ்சிறு எறும்புகள் மலைப்பாம்பைத் தின்றுவிட்டன. இதனால் யாரையும் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது, ஒவ்வொருவருக்கும் ஒரு திறன் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று இயற்கை நமக்குச் சொல்கிறது. இந்த வீடியோ X தளத்தில் வைரலாகியுள்ளது.
வைரல் வீடியோவை கீழே காணலாம்:
Snake invades ant territory and gets pulverized!
Nature tells us;
never underestimate any living creature, the community is stronger than one ...pic.twitter.com/4dj55fVVHF— Figen (@TheFigen_) September 16, 2024
மேலும் படிக்க | தன் குட்டிகளிடம் சிக்கித்தவிக்கும் தந்தை கொரில்லா! என்னா சேட்டை..வைரல் வீடியோ..
பாம்பு தாக்கப்படும் வைரல் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வித்தியாசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். எறும்புகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க ஒன்றாக சேர்ந்து செயல்படுவதாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. மனிதர்களை விட எறும்புகள் புத்திசாலித்தனம் கொண்டவை என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தலைமைப் பண்புகளை நாம் எறும்புகளிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம். ஒற்றுமையே பலம் என்று எறும்புகள் பாடம் புகட்டுகின்றன.
தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. அந்த வகையில் வன வாழ்க்கை குறித்த அரிய தகவல்களை வழங்கும் விலங்குகள் வீடியோக்கள் குறிப்பாக பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வம் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிக முக்கிய இடம் உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | போனில் மூழ்கிய சிறுவன்! உள்ளே நுழைந்த பாம்பு! அடுத்து என்ன நடந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ