வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


காட்டு விலங்குகள் தொடர்பான பல்வேறு வகையான வீடியோக்களை நாம் இணையத்தில் பார்க்கிறோம். இவற்றில் சில சமயங்களில் விலங்குகளின் அன்பை நாம் பார்க்கிறோம், சில சமயங்களில் அவற்றுக்கு இடையில் இருக்கும் க்ரோதத்தைப் பார்க்கிறோம். சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள் பிற விலங்குகளுடம் சண்டையிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இவை ஒரு பாம்புடன் சண்டையிடுவதைப் பார்ப்பது மிக அரிது. 


இப்படிப்பட்ட ஒரு சண்டை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒரு ஆற்றங்கரையில் சிறு மலைப்பாம்பை சிறுத்தை ஒன்று தாக்குவதை வைரலாகி வரும் வீடியோவில் காண முடிகின்றது. சிறிய மலைப்பாம்பு ஒன்றை பார்த்த உடனேயே சிறுத்தை அதன் மீது தாக்குதல் நடத்துவதை வீடியோவில் காண்கிறோம். 


மேலும் படிக்க | துணிக்கடையில் துணிகரம்: டிரையல் ரூமில் மறைந்திருந்தது யார்? வைரல் வீடியோ 


சிறு மலைப்பாம்புடன் மோதும் சிறுத்தை


காட்டு விலங்குகள் தொடர்பான இந்த காணொளியில், ஆற்றின் கரையில் சிறுத்தை ஒன்று தண்ணீர் குடிக்க வருவதைப் பார்க்கிறோம். அப்போது ஒரு சிறிய மலைப்பாம்பு ஒன்றை அது அங்கே காண்கிறது. சிறிதும் எதிர்பாராத விதமாக சிறுத்தை பாம்பின் மீது பாய்ந்து அதை வாயால் கவ்விக்கொள்கிறது. இந்த தாக்குதலில், பாம்பும் சிறுத்தையை எதிர்த்து சண்டையிடுகிறது. எனினும், சிறுத்தை சுதாரித்துக்கொண்டு தன் பிடியை இன்னும் உறுதியாக்குகிறது. பின்னர் மலைப்பாம்பை வாயில் பிடித்தவாறு அங்கிருந்து செல்கிறது. சிறுத்தைக்கும் பாம்புக்கும் இடையில் நடக்கும் சண்டையின் வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 


சிறுத்தையுடன் சண்டையிடும் சின்ன மலைப்பாம்பின் வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு 



இப்படி ஒரு காட்சியை பார்த்திருக்க மாட்டீர்கள்


இந்த வீடியோவில் காணப்படுவது போன்ற காட்சிகளை பொதுவாக பார்க்க முடியாது. Wild_animals_creation என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோவுக்கு இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. 


மேலும் படிக்க | மைதானத்தில் புழுதியைக் கிளப்பி, இணையத்தில் பட்டையைக் கிளப்பிய சண்டை: வைரல் வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR