மைதானத்தில் புழுதியைக் கிளப்பி, இணையத்தில் பட்டையைக் கிளப்பிய சண்டை: வைரல் வீடியோ

Viral Video: தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் ஒரு மைதானத்தில் இரண்டு எருதுகள் ஒன்றோடொன்று முரட்டுத்தனமாக சண்டையிடுவதைக் காண முடிகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 18, 2022, 06:48 PM IST
  • இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை மகிழ்விக்கின்றன.
  • அவ்வப்போது வனவிலங்குகளின் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின்றன.
  • இந்த வீடியோவில் ஒரு மைதானத்தில் இரண்டு எருதுகள் ஒன்றோடொன்று முரட்டுத்தனமாக சண்டையிடுவதைக் காண முடிகிறது.

Trending Photos

மைதானத்தில் புழுதியைக் கிளப்பி, இணையத்தில் பட்டையைக் கிளப்பிய சண்டை: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

அவ்வப்போது வனவிலங்குகளின் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களை மகிழ்விக்கின்றன. இவற்றில் சில சமயங்களில் விலங்குகளின் அன்பை நாம் பார்க்கிறோம், சில சமயங்களில் அவற்றுக்கு இடையில் இருக்கும் க்ரோதத்தைப் பார்க்கிறோம். 

மேலும் படிக்க | துரத்தி துரத்தி விரட்டிய பாம்பு, மிரண்டு ஓடிய நபர் பிழைத்தாரா? வைரல் வீடியோ 

தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் ஒரு மைதானத்தில் இரண்டு எருதுகள் ஒன்றோடொன்று முரட்டுத்தனமாக சண்டையிடுவதைக் காண முடிகிறது. இந்த சண்டைக்கு மத்தியில் மற்றொரு காளையும் வருகிறது. அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. 

எருதுகள் சண்டையில் காளையின் எண்ட்ரி

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இரண்டு எருதுகள் ஒரு மைதானத்தில் காணப்படுகின்றன. இரு எருதுகளும் சாதாரணமாக நின்றுகொண்டிருக்கின்றன. திடீரென இரண்டு எருதுகளுக்கும் இடையில் சண்டை துவங்கி விடுகிறது. அப்போதுதான் ஒரு காளையும் சண்டையில் நுழைகிறது. அது எருதுகளை ஒவ்வொன்றாக தூக்கி வீசத் தொடங்குகிறது. 

காளையின் ஆபத்தான நடவடிக்கையைப் பார்த்து இரண்டு எருதுகளும் அங்கிருந்து ஓடுகின்றன. காட்டு விலங்குகள் சண்டையிடுவது தொடர்பான இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

பட்டையைக் கிளப்பும் அந்த வீடியோவை இங்கே காணலாம்: 

காட்டு விலங்குகளின் இந்த வீடியோ வைரலானது

எருதுகள் மற்றும் காளையின் இந்த வீடியோ charminganimalsdaily என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ எவ்வளவு வைரலானது என்பதை அதற்குக் கிடைத்த வியூஸ்கள் மற்றும் லைக்குகளில் இருந்தே அறிந்து கொள்ளலாம். இந்த வீடியோ இதுவரை 3 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகள் மற்றும் வியூஸ்களைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகளும் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

மேலும் படிக்க | தாயை பயமுறுத்தும் வெள்ளை புலிக்குட்டியின் குறும்பு! வைரலாகும் வீடியோ! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News