Leopard Attack Viral Video: மத்திய பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் கடந்த அக். 20ஆம் தேதி அன்று வனப்பகுதிகளுக்குச் சுற்றுலா சென்றவர்களை சிறுத்தை ஒன்று தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த வீடியோ தற்போது பல்வேறு சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். தற்போது வைரலாகி வரும் வீடியோவை (Viral Video) பார்த்தாலே அங்கு என்ன நடந்திருக்கிறது, அந்த சிறுத்தை மனிதர்களை தாக்குவதற்கான காரணம் என்பதை புரிந்துகொள்ள முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷாதோல் மாவட்டத்தில் சோன் ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதி ஒன்றுக்கு சிலர் சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா சென்றபோது அங்கு சிறுத்தை நடமாடுவதை அவர்கள் பார்த்துள்ளனர். சிறுத்தையை பார்த்த ஆர்வத்தில் அதனை வீடியோ எடுக்க, அதை நோக்கி நகர்ந்து செல்கிறார்கள். மேலும் அங்கிருந்து கூச்சல் எழுப்பியபடியே இருந்தனர். இதனால், அரண்டு போன சிறுத்தை அவர்களை நோக்கி ஓடி வந்தது. தூரத்தில் வீடியோ எடுத்துக்கொண்டவர்களும் சிறுத்தை தங்களை நோக்கி வருவதை கண்டதும் தெறித்து ஓடினர். ஆனால், சிறுத்தையை காண மூன்று பேர் பக்கத்தில் சென்றார்கள், அவர்களைதான் சிறுத்தை தாக்கியது. 


ஆக்ரோஷமாக தாக்கிய சிறுத்தை


அதிலும் ஒருவரை அந்த சிறுத்தை (Cheetah) ஆக்ரோஷமாக தாக்கியது. அப்போது உடனே அந்த குழுவினர் கூச்சல் சத்தம் எழுப்பியதால் அவரை விட்டு சிறுத்தை காட்டுப்பகுதிக்குள் ஓடியது. இவை அனைத்தும் அந்த 30 வினாடி வீடியோவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோதான் அனைவராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிலர் சிறுத்தை பக்கம் போக வேண்டாம் என எச்சரிக்கின்றனர். ஆனால் அவர்களின் பேச்சை கேட்காமல் இரண்டு - மூன்று பேர் சென்றனர். அவர்களைதான் சிறுத்தை தாக்க பாய்ந்தது.


 



மேலும் படிக்க | நாயை விரட்டப்போய் உயிரை விட்ட இளைஞர்!! இதயத்தை நிறுத்தும் வைரல் வீடியோ


புதரில் இருந்து ஓடி வந்த சிறுத்தை அந்த நபரின் கழுத்தை கடிக்க முயன்றது. ஆனால் தலைத்தெறித்து ஓடியவர்கள் தங்களின் நண்பன் சிறுத்தையால் தாக்கப்படுவதை உணர்ந்து கூச்சல் ஒலி எழுப்பியதால் அங்கிருந்து சிறுத்தை தப்பிச்சென்றது. இதனால் அதில் இருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்கள். காயமடைந்தவர்கள் ஷாதோல் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு அவர்களின காயத்திற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 


எச்சரிக்கும் நெட்டிசன்கள்


அந்த சிறுத்தை சமீபத்தில் குட்டிகளை ஏதும் ஈன்றிருக்கலாம் என்றும் அந்த கூட்டத்தால் ஏதும் தனக்கும், தனது குட்டிகளுக்கும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் கூட சிறுத்தை அவர்களை தாக்கியிருக்கக் கூடும் என்கின்றனர் உள்ளூர்வாசிகள். சம்பவம் நடந்த இடம் ஷாதோல் நகரில் இருந்து சுமார் 20 கி.மீ., தொலைவில் உள்ள கிடௌலி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள சுற்றுலாத் தளம் ஆகும். இங்கு ஓடும் சோன் ஆற்றின் கரையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


தற்போது இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் அந்த இளைஞர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வனப்பகுதிகளுக்கு சுற்றுலா சென்றால் அந்த சூழலை கெடுக்காமல், வனவிலங்குகளின் அமைதியை சீர்குலைக்காமல் நிதானமாக பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அஜராகமாகவும், அச்சுறுத்தலை விளைவிக்கும் பொருட்டும் நடந்துகொள்ளக் கொள்ள கூடாது எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வனப்பகுதிகளில் அராஜகமாக நடந்துகொண்டால் இதுபோன்றுதான் நடக்கும் எனவும் எச்சரிக்கின்றனர். 


மேலும் படிக்க | படுக்கைக்கு கீழ் பின்னிப்பிணைந்த பாம்புகள்: மோதலா, காதலா? இணையத்தை பற்ற வைத்த வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ