பேருந்தில் ஏற முயற்சி செய்த சிறுத்தை! அலறியடித்து ஓடிய பயணிகள்!

Bengaluru Leopard Viral Video: பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்காவில் சிறுத்தை ஒன்று சுற்றுலாப் பயணிகளின் பேருந்தின் மீது ஏறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.   

Written by - RK Spark | Last Updated : Oct 7, 2024, 07:01 PM IST
  • பேருந்தில் ஏற முயன்ற சிறுத்தை.
  • சுற்றுலா பயணிகள் பீதியில் உறைந்தனர்.
  • பெங்களூரு தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது.
பேருந்தில் ஏற முயற்சி செய்த சிறுத்தை! அலறியடித்து ஓடிய பயணிகள்! title=

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருக்கு அருகில் அமைந்துள்ள பன்னர்கட்டா தேசிய பூங்காவில் ஒரு சிறுத்தை சஃபாரி வாகனத்தின் மீது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது பேருந்தின் உள்ள இருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சில நிமிடங்கள் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கம்பீரமான சிறுத்தை ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் நிரம்பிய பேருந்தை நோக்கி திடீரென்று பாய்வதில் இருந்து இந்த வீடியோ தொடங்குகிறது. பார்த்தவுடன் பலரது இதயங்களையை கதிகலங்க செய்து கவனத்தையும் ஈர்த்து. இந்த வியத்தகு வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. பேருந்தின் உள்ள இருந்த பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி போகினர். 

மேலும் படிக்க | 'ஜாதி, மதம்... மனிதர்களை வெறுக்க வைக்கும்...' நடிகர் அஜித் வீடியோ வைரல் - AK பேசியது என்ன?

இந்த குறிப்பிடத்தக்க சம்பவம் வனவிலங்குகளின் கணிக்க முடியாத தன்மையை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், வரும் காலத்தில் அந்த இடத்திற்கு செல்ல திட்டமிட்ட அனைவருக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த சுற்றுலா பேருந்தின் டிரைவர் விலங்குகளை பார்கப்பதற்காக வாகனத்தை இடையில் நிறுத்தி உள்ளார். அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சுற்றுலாப் பயணிகள் பூங்காவை சுற்றியுள்ள வனவிலங்குகளை காண வாகனம் நிறுத்தப்பட்டது. இந்த சமயத்தில் திடீரென்று சிறுத்தை ஒன்று பேருந்தின் மீது பாய்ந்து, சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடைசியில் பயணிகளை எதுவும் செய்யவிடாமல், டிரைவர் பேருந்தை மெதுவாக நகர்த்தி சென்றார். 

துணிச்சலான மற்றும் விறுவிறுப்பான இந்த காட்சிகள் பலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. சிறுத்தை தனது நம்பமுடியாத வலிமையையும் திறமையையும் வெளிப்படுத்தி, பேருந்தின் கூரையின் மீது குதிக்க முயன்றது. பேருந்து ஓட்டுநர் மெதுவாக வாகனத்தை முன்னோக்கி நகர்த்தி அங்கிருந்து பத்திரமாக அனைவரையும் மீட்டார். இந்த எதிர்பாராத சம்பவம் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கி உள்ளது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுனரின் விரைவான சிந்தனை மற்றும் அதிர்ஷ்டம் காரணமாக, சம்பந்தப்பட்ட அனைவரும் காயமின்றி தப்பினர். இந்த காட்சியானது மனித மற்றும் வனவிலங்கு சூழல்களின் சந்திப்பில் நிகழக்கூடிய கணிக்க முடியாத தொடர்புகளின் தெளிவான நினைவூட்டலாக இருந்தது.

மேலும் படிக்க - பென்ஷன் தேதியில் மாற்றம்.. வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் போட்ட அதிரடி உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News