இன்றைய வைரல் வீடியோ: சமூக ஊடகங்கள் என்பது பொழுதுபோக்கு என்பதையும்த் தாண்டி பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்துவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. பிரபல சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளும் வித்தியாசமானவை. அறிவுக்கு தீனி போடும் செய்திகளிலேயே, ஒவ்வொரு ஊடகமும் வெவ்வேறு கோணத்தில் செய்திகளை வழங்குகின்றன. வெவ்வேறு கோணங்கள் மட்டுமல்ல, செய்திகள், செய்தித் தொகுப்பு, ஆடியோ, வீடியோ, ஸ்லைடிங் புகைப்படங்கள் என பல்வேறுவிதமான முறைகளிலும் சமூக ஊடகங்கள் சக்கைப்போடு போடுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும் விதவிதமான செய்தி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தாலும், அவற்றில் மனதை லேசாக்கும் வீடியோக்கள் தொடர்ந்து பார்க்கப்பட்டு வைரல் ஆகின்றன.


சமூக ஊடகங்களில் வைரலாகி அனைவரையும் கவரும் வீடியோக்களில் பெரும்பாலானவை, மனதிற்கு இதமளிக்கும் வீடியோக்களாக இருக்கின்றன. இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள், நம்மால் நேரில் சென்று பார்க்கமுடியாதவைகளாக இருக்கின்றன. அவற்றில், சிலவற்றில் உபயோகமான தகவல்கள் இருக்கின்றன என்றால், சிலவற்றில் இயற்கையின் ஆச்சரியம் நம்மை பிரம்மிக்க வைப்பதாக இருக்கிறது.


மேலும் படிக்க | சிறு வயதை நினைப்படுத்தும் யானைக்குட்டிகளின் சண்டை வீடியோ! மனம் மயக்கும் வைரல் வீடியோ


பயனுள்ள பல தகவல்களுடன் மனதை லேசாக்கும் வீடியோக்களும் நம்மை மகிழ்விக்கின்றன. மகிழ்ச்சி ஒருபுறம் என்றால், மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள, இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் உதவுகின்றன.


சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பலருக்கு பயனுள்ளதாக இருந்தாலும், சில என்றென்றும் மறக்கமுடியாதவைகளாக மாறிவிடுகின்றன. அப்படிப்பட்ட வீடியோக்களில் ஒன்று தான், எரிமலையில் இருந்து மின்னல் தோன்றும் அதிசய வீடியோ.


இயற்கையின் படைப்பில், அனைவரையும் அதிசயப்பட வைப்பது உயிரினங்கள் மட்டுமா?  இல்லை என்பதே பதிலாக இருக்கும். வித்தியாசமான சம்பவங்களையும், அரிய இயற்கை நிகழ்வுகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பவர்கள், அவற்றை பதிவு செய்து வீடியோவாக பகிர்கின்றனர். இப்படி பல வீடியோக்கள், இணையத்தில் வைரலாகின்றன. 


மேலும் படிக்க | மனதை மயக்கும் இயற்கையின் வண்ணங்கள்! பார்க்க பார்க்க வியப்பூட்டும் நீரூற்று! 


சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆகி, சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் எரிமலையில் இருந்து இடியும் மின்னலும் தோன்றும் வீடியோ இது...



வீடியோவைப் பார்த்தால், ஒருபுறம் அச்சம் என்றாலும் மறுபுறம் இயற்கையின் முன் நாம் தூசு என்ற எண்ணம் தோன்றுவதை மறுக்க முடியவில்லை. பார்க்கப் பார்க்க ஆச்சரியம் தரும் இந்த வீடியோவைப் பார்த்தால், என்ன சொல்வது என்றே புரியவில்லை. நாம் அறிய அற்புதங்களும் ரகசியங்களும் இயற்கையில் கொட்டிக்கிடக்கிறது என்பதை மட்டும் மறுக்க முடியாது.


எரிமலை வீடியோ வைரல்


வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்தால், அடுத்த நொடி சாஸ்வதம் இல்லை என்ற நிலையிலும், இயற்கையின் அதிசயத்தையும் மர்மத்தையும் உணர்த்தும் இந்த சம்பவம் பல நாட்கள் நம் மனதில் இருந்து மாறாது என்று சொல்லலாம். இந்த வீடியோவை பலமுறை பார்த்தாலும், இன்னும் ஒரு முறை பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் எழுவதை தவிர்க்க முடியாது.


மேலும் படிக்க | திடீர்னு இப்படி டிரெயின் வந்தா? பொறுமையா இருங்க, உயிர் தான் முக்கியம் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ